என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின்

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் லோக் ஆயுக்தா சட்டம் குறித்த கழக நிலைப்பாட்டு மடல். பொதுவாழ்வில் நேர்மை நிறைந்த தூய்மையையும், ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையையும், மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும், பொது மக்கள் பெரிதும் விரும்பி எதிர்பார்க்கும் காலம் இது. அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் இருப்பவர்கள், கையில் காசில்லாதவர்களாக இருந்தாலும் மனதில் மாசில்லாதவர்களாக இருக்க வேண்டும் என வாக்களிக்கும் குடிமக்கள் உரிமையுடன் எதிர்பார்ப்பது இயல்புதானே! மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர் களின் அடிப்படைக் கடமை; அரசியல் வாதிகளுக்கு இருக்க வேண்டிய அவசியமான பொறுப்பு. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, திட்டமிட்டு எதிர் முகாமிலிருந்து வீசப்பட்ட பழிகளையும் அவதூறுகளை யும் அவமதிப்புகளையும் முகத்துக்கு நேராகவே சந்தித்து வெற்றிகரமாக ஏறி வந்த இயக்கம். அதற்காகப் பொது வாழ்வை விட்டு ஒதுங்கி விடாமல், ஓடி ஒளியாமல் அடிப்படை முகாந்திரமே இல்லாத அநியாயமான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு, நியாயத் தீர்ப்பின் மூலம் நீதியை நிலை நாட்டி, நெருப்பாற்றில் குளித் தெழுந்து, புடம்போட்ட தங்கமாக தகத்தகாய மாக மிளிர்கின்ற வரலாறு, சதிகளின் விளைவான சர்க்காரியா கமிஷன் முதல் 2ஜி வழக்கு வரை தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. கழகத்தின் மீது அவதூறு சுமத்திய அநேகம் பேர் வழக்குகளை சந்தித் தார்கள்; அவற்றை எதிர்கொள்ள முடியாமல் வாய்தா வாங்கிக் கொண்டு ஓடி ஒளிந்தார்கள்; இழுத்தடித்துப் பார்த் தார்கள்; இறுதிவரை பகீரதப் பிரயத் தனம் செய்தும் சிறிதும் பலனின்றி இறப்புக்குப் பிறகும் நிரூபணமான குற்றவாளி என்ற மாறாத கறையோடு மறைந்து போனதையும் வரலாறு தன் பக்கங்களில் பதிவிட்டுள்ளது. இத்தகைய இரண்டு விதமான அரசியல் போக்குகள் நிலவுகிற சூழலில் தான், தி.மு.கழகம் எப்போதுமே வெளிப் படைத்தன்மை கொண்ட அரசியலையும், ஆட்சி முறையையும் தொடர்ந்து வலியுறுத் துவதுடன், ஆளுகின்ற வாய்ப்புகள் அமையும்போது அதற்கான திடமான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் இரண்டா வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 1971-76 ஆட்சிக்காலத்தில், பொதுவாழ் வில் ஈடுபட்டோர் இலஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு சட்டம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1973ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அது குறித்த வலியுறுத்தலும் பரவி மிகுந்துள்ள சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத் தின் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக் தாவைக் கொண்டு வருவோம் என, பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித் ததை கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற முறையில் நாம் அனைவருமே பெருமிதத் துடன் எடுத்துக்காட்ட முடியும். தேர்தல் களத்தில் நடந்த சூதான (கடிரட) விளையாட்டுகளால் வெறும் 1.1ரூ வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஆட்சியைத் தொடரும் வாய்ப்பினை அ.தி.மு.க. பெற்றது. ஆனால், அது ஊழலை ஒழிக்கவோ, வெளிப்படைத் தன்மையான நிர்வாகத்தை அளிக்கவோ விரும்பாத காரணத்தால், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க முன்வரவே யில்லை. சட்டமன்றத்திலேயே லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் கழக உறுப்பினர்களும் வலியுறுத்திப் பேசி னோம். கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்றிருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வருவார்கள்? தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களும் இதேபோல இருந்த காரணத்தால், ஜூலை 10ந் தேதிக்குள் லோக் ஆயுக்தாவை நிறை வேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவிட்டது. அதன் காரணமாகத்தான் அரைகுறை மனதுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வரப்பட்டது. தி.மு.கழகத்தைப் பொறுத்த வரை, மக்கள் நலன் காத்திட நன்மையளிக்கும் செயல்பாடு எந்தப் பக்கமிருந்து வந்தா லும், கட்சி மாச்சரி யங்களுக்கு அப்பாற் பட்டு ஆதரிப்பது வழக்கம். இதற்கு காவிரி விவகாரம், நீட் தேர்வு எதிர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்ற பெயர் மாற்றம் உள்ளிட்ட பல முன்னுதாரணங் கள் உண்டு. அதுபோலவே, உச்சநீதிமன்ற நெருக்கடியின் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் குறை மனதுடன் கொண்டு வந்தபோதும் லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவை எடுத்த எடுப்பிலேயே தி.மு.கழகம் வரவேற்றது. அதே நேரத்தில் அந்த சட்டமுன்வடிவு முழுமையான வலிமை கொண்டதாக, நிர்வாகத்தில் ஊழலை உண்மையாகவே ஒழிக்கக்கூடியதாக - வெளிப்படைத் தன்மை கொண்ட அரசாங்கத்துக்கு உத்தரவாதம் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் தி.மு.கழகம் உறுதி யாக இருப்பதால், அது குறித்த விவாதத் தின் போது கழகத்தின் சார்பிலான கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டன. சட்ட முன் வடிவின் வரையறையில் இருக்கக்கூடிய பிரிவு 2(1)(ஐ)-ன் கீழ் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பிரிவு 12-(1) ன் கீழ் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பில், மற்ற மாநிலங்களில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தில் இருப் பது போல முதலமைச்சரை விசாரிக்கும் அதிகாரமும் லோக் ஆயுக்தாவிற்கு உண்டு என்பது தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. ஏற்கனவே இதே அவையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், 1973ம் ஆண்டு கொண்டுவந்த, பொது வாழ்வில் ஈடுபட்டோர் இலஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு சட்டத்தில், முதலமைச்சர் முதல் கவுன் சிலர் வரை அனைவரையும் விசாரிக்கும் அதிகாரம் முதன்முதலில் அளிக்கப்பட் டது என்பதை நான் இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். அடுத்ததாக, லோக் ஆயுக்தா தலைவரை தெரிவு செய்யும் சட்டமுன் வடிவு பிரிவு 4(2) இல் முதலமைச்சர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என மூன்று பேர் மட்டும் இடம் பெற்றிருப்பது வெளிப்படைத் தன்மைக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்காது. ஆகவே, லோக் ஆயுக்தா தலைவரை தெரிவு செய்யும் தேர்வுக் கமிட்டியில் இந்த மூன்று உறுப்பினர்களோடு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரையும், துறையைச் சார்ந் திருக்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரி (நுஅநேவே ஞநசளடி) ஒருவரையும் சேர்க்க வேண்டுமென நான் வலியுறுத்த விரும்புகிறேன். அதேபோல், சட்ட முன்வடிவு பிரிவு 4(2)(ஊ)யில் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கட்சியின் தலைவர் உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. அதில் தெளிவு தேவை. அங்கீகரிக் கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலை இல்லையென்றால் மட்டுமே பெரும்பான்மை உறுப்பினர்களின் கட்சியின் தலைவர் உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று சட்ட முன் வடிவில் அந்தப் பிரிவில் உரிய திருத்தத்தைச் செய்திட வேண்டும். லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு 3(2)(ஹ) இல், லோக் ஆயுக்தா தலைவராக உயர்நீதி மன்ற நீதிபதியோ அல்லது ஊழல் தடுப்பு கொள்கை, பொது நிருவாகம், சட்டம் நிதி, விழிப்புணர்வு உள்ளிட்ட துறைகளில் 25 வருடம் அனுபவ மிக்க ஒருவரை நியமிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது லோக் ஆயுக்தா அமைப்பினை அதி காரிகள் தலைமையி லான அமைப்பாக மாற்றக்கூடிய முயற் சியாக தெரிகிறது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையான கண்ட னத்தைத் தெரிவித் துக் கொள்கிறது. லோக் ஆயுக்தா விற்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந் தவர் மட்டும்தான் தலைவராக இருக்க வேண்டுமென்று சட்ட முன்வடிவு பிரிவு 3 (2)(ஹ) இல் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள் கிறேன். சட்ட முன்வடிவின் பிரிவு 9(1)ன் கீழ் லோக் ஆயுக்தாவின் செயலாளராக, துணைச் செயலாளர் அந்தஸ்தில் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறப் பட்டு இருக்கிறது. அதை செயலாளர் அந்தஸ்திற்கு உயர்த்த வேண்டும். அதேபோல் 9(2)ன் கீழ் துணைச் செயலா ளர் அந்தஸ்தில் விசாரணை இயக்குநர் (னுசைநஉவடிச டிக ஐளூரசைல) நியமிக்கப்பட்டு அவரே விசாரணைக் குழுவின் (ஐளூரசைல றுபே) தலைவராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையும் செயலாளர் அந்தஸ்திற்கு உயர்த்த வேண்டும். - இந்தக் கருத்துகளை சட்டமன்றத் தில் நடைபெற்ற விவாதத்தின் போது எடுத்து வைத்து, அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாக - நீதிமன்றத்தின் கண்டனத் திலிருந்து தப்பிப்பதற்கான நோக்கத்தில், முழுமையான மன சம்மதமின்றி உருவாக்கியுள்ள லோக் ஆயுக்தாவில் ஒளிந்திருக்கும் உள்நோக்கத்தை வெளிப்படுத்தினேன். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட பலரும் தமிழ்நாடு அரசாங்கத்தின் லோக் ஆயுக்தா சட்டம், வலிமையற்றதாக வெறும் காகிதக் கணை போல இருக் கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். மக்கள் மன்றத்தின் எண்ணங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைத்தது தி.மு.கழகம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படாத நிலையில், எதிர்ப்பினைப் பதிவு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்தோம். நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்பதுபோல, அரைகுறை மனதினரான அ.தி.மு.க. ஆட்சியாளர் கள் வலிமையில்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவின் குறைகளை மறைப் பதற்காக, லோக் ஆயுக்தா சட்டம் வேண்டும் என்று கோரிய தி.மு.க. அதனை எதிர்த்து வெளிநடப்பு செய்ய லாமா என வழக்கம்போல தங்கள் மீது படிந்திருக்கும் களங்கத்தை மறைக்கும் யுக்தியாக, தி.மு.கழகத்தின் பக்கம் பழியைத் திருப்பப் பார்க்கிறார்கள். ஊடகங்கள் - பத்திரிகைகள் ஒன்றிரண் டில்கூட, லோக் ஆயுக்தாவுக்கு தி.மு.க. எதிர்ப்பு என்பதைப்போலத் தலைப்பிடப்பட் டதைக் காண முடிகிறது. லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.கழகம் எதிர்க்கவில்லை. அது, பல் இல் லாத பொக்கை வாயாக - வெட் டப் பயன்படாத அட்டைக்கத்தி யாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ஊழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னத மான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. சட்ட முன்வடிவு பிரிவு 13(1)ன் கீழ் எது பற்றியெல்லாம் லோக் ஆயுக்தா விசாரிக் கக் கூடாது என்றால், அரசு ஒப்பந்தங் கள் பற்றிய புகார்களை விசாரிக்க முடியாது; அரசில் போடப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க முடியாது; உள்ளாட்சி முறை மன்ற நடுவம் விசாரிக்கும் புகார்களை விசாரிக்க முடியாது; அதாவது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளோர் மீதான புகார்களை விசாரிக்க முடியாது. சட்டமன்றத்தில் நான் உரையாற்றும் போது, லோக் ஆயுக்தா எதற்காக அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே இந்த 13(1) ன் கீழ் பாழ்படுத்தப்பட் டுள்ளது. ஆகவே, இதனை உடனடியாக நீங்கள் நீக்கிட வேண்டும். சட்ட முன்வடிவு பிரிவு 26(2)ன்படி லோக் ஆயுக்தா அமைப்பு அரசுக்கு பரிந்துரை அளிக்கும் அமைப்பாக இருக்கிறது. அதற்குப் பதில், ஆணை பிறப்பிக்கும் அமைப்பாக இந்த விதிகள் திருத்தப்பட வேண்டும். சட்ட முன்வடிவு பிரிவு 35(1)ன் கீழ் பொய்ப் புகார் கொடுப்பவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை, ஒரு இலட்ச ரூபாய் அபராதம் எனக் கூறப்பட்டு இருக்கிறது. இதே பிரிவின் கீழ், நல்லெண்ணத்தின் அடிப்படையில் புகார் கொடுப்ப வர்கள் என்ற ஷரத்து இருந்தாலும், தகவல் கொடுப்பவருக்கு பாது காப்பு எதுவும் வெளிப்படையாக இதிலே குறிப்பிடப்படவில்லை. ஆகவே, தகவல் கொடுப்பவருக் கான பாதுகாப்பையும், அவர் களுக்கு எதிரான நடவடிக்கை களைத் தடுக்கவும், தண்டிக்கவும் ஒரு பிரிவு இந்த லோக் ஆயுக்தா சட்ட வடிவில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஆலோ சனைகள் ஏனோ ஏற்கப்படவில்லை. அதன் பின்னர்தான், இது ஒரு அதிகாரம் இல்லாத அமைப்பாக, பவரும் பல்லும் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை இங்கே நீங்கள் அறிமுகப்படுத்தி இருக் கிறீர்கள். எனவேதான், செலக்ட் கமிட்டிக்கு (தேர்வுக்குழு) அனுப்ப வேண்டுமென்று வலியுறுத்தியிருக் கிறேன். அதுபற்றி அமைச்சர்கள் எவ்வித பதிலும் சொல்லவில்லை. இதற்குப் பதில் சொல்லாத சூழ்நிலை யில், செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய் தோம். அப்போதாவது, ஆள்வோர் தரப்பிலிருந்து, தேர்வுக்குழுவுக்கு அனுப்ப உத்தரவாதம் அளிக்க முன்வந்திருக்கலாம். ஏனோ தானோ வென கண்துடைப்பிற்காகச் செயல் படுவோரிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா? ஆட்சியாளர்கள் முன்வராத காரணத்தால், வெளிநடப்பு செய்தோம். நாங்கள் எந்த சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்தோமோ, அதே சட்ட மன்றத்திலிருந்து பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், லோக் ஆயுக்தாவைக் கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க. ஏன் இதை எதிர்க்கிறது? மாளிகையில் பல்பு இல்லை என்று சொல்வதுபோல காரணம் சொல்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். எள்ளி நகை யாடுவதாக நினைத்துக்கொண்டு, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பியுள்ளார் சகோதரர் ஜெயக்குமார் அவர்கள். இதே சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி கழகம் பேசிய போதெல்லாம், மத்திய அரசின் லோக்பால் சட்டத்திருத்தத்திற் காகக் காத்திருக்கிறோம் என்று காலங் கடத்தியவர்தான் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது உச்சநீதிமன்ற நெருக்கடியால், பெயரளவிற்கு ஒரு சட்டமுன்வடிவு, கூர்மையும் வலிமையும் ஏதுமின்றி கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகையில் பல்பு இல்லையென்றால் இருண்டுதான் கிடக்கும். கமிஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் முடிவு செய்யும் ஒப்பந்தங்கள் (டெண்டர்கள்) பற்றி லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது; கலெக் ஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் நியமிக்கும் பணிகள் (போஸ்டிங்) குறித்து லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படியென்றால், இந்த சட்ட முன்வடிவால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? அ.தி.மு.க. கட்டியுள்ள மதில் இல்லாத அரைகுறை மாளிகையில் பல்பு மட்டுமில்லை, மெயின் ஸ்விட்ச்சும் இல்லை; மின் இணைப்பும் இல்லை. எவருக்கும் பயன்படாத இருளடைந்த - பாழடைந்த கட்டட மாகத்தான் அது இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் மக்களிடம் எடுத்துரைப்போம். முழுமையான - வலிமைமிக்க லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், தற்போதைய சட்டமுன்வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி அதன் அம்சங்களைப் பரிசீலித்து வலிமைப்படுத்த வேண்டும். சட்டப்பேரவையில் தி.மு.கழகம் வலியுறுத்திய இந்த நியாயமான கோரிக்கையை, பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரும் முதலமைச்சரிடம் தெரிவித் திருப்பதாக நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது. உடனிருக்கும் அமைச்சர்களே தி.மு. கழகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை வலியுறுத்திய நிலையில், முதலமைச்சரோ இந்த பல் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவே நீடிப்பதுதான் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பாதுகாப்பானது என்ற காரணத்தால், தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு தயங்கு கிறார்- மறுக்கிறார் - புறக்கணிக்கிறார் என அந்த நல்லுள்ளம் படைத்தவர்கள் வாயி லாக உணர முடிகிறது. ஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக் காலத்தை எப்படியாவது அனுபவித்துவிடவேண் டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநி லத்தின் உரிமைகளைக் கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்துபவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர் பார்க்க முடியுமா? தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே! உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. நமது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனால், அதை நிறைவேற்றுகின்ற அதிகாரம் நம் கைகளில் மக்களின் ஆதர வினால் விரைந்து வரும். அப்போது, அந்த சட்டத்திற்குப் பல் இருக்கும்; பவர் இருக்கும். அதன் காரணமாக, முன்னாள் ஆட்சியாளராகப் போகும் இந்நாள் ஆட்சியாளர்கள் அந்தப் பற்களின் வலிமையை உணரக்கூடிய இடத்தில் வசமாகச் சிக்கியிருப் பார்கள் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ஊழலுக்கு இடம் தராமல், வலிமையான பற்களைக் கொண்ட லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டு, ஆட்சி நிர்வாகம் என்பது அனைத்துத் தரப்பு மக்களும் அடி முதல் நுனி வரை விரும்பிச் சுவைக்கும் கரும்பு போன்ற சட்டத்தை வரவேற்று உருவாக்கும் காலம் விரைவில் ஜனநாயக ரீதியாக அமையும். அதுவரை போலிகள் போடும் கொண்டாட்டத்தைப் பொறுத்துக் கொண்டுதானே ஆகவேண்டும்! பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது முதுமொழியன்றோ! அன்புடன், மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் ஆண்டு 2049, ஆனி - 27. 11-07-2018.