பேரவையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்க

சென்னை, ஜூலை 12- குறிஞ்சிப்பாடி தொகுதி திருவந்திபுரம் திருக்கோயிலுக்கு தினம் தினம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அங்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என்று சட்டப்பேரவை யில் முன்னாள் அமைச் சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக சட் டப்பேரவையில் நடை பெற்ற வினா - விடை நேர விவாதம் வருமாறு:- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்: குறிஞ்சிப்பாடி தொகுதி, திருவந்திபுரம் அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோவி லுக்கு வருகைதரும் சுற்று லாப் பயணிகளுக்கு அடிப் படை வசதிகள் செய்து தர அரசு ஆவன செய்யுமா? அமைச்சர் வெல்ல மண்டி ந.நடராஜன்: இனி வரும் காலங்களில் இத்திருக்கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், கூடுதல் வசதிகள் தேவைப்படும் கார ணத்தை மேற்கோள் காட்டி, சுற்றுலாத் துறை யின் நிதிநிலை ஆதா ரத்தைப் பொறுத்து முதலமைச்சரு டைய கவனத்திற்கு எடுத் துச் சென்று பரிசீலிக்கப்படும். எம்.ஆர்.கே, பன்னீ ர்செல்வம்: அமைச்சர் அவர்கள், பல சலு கைகள் அந்தக் கோயி லுக்குக் செய்ததாகக் கூறுகின்றார்கள், 2006-2008 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் உள் ளாட்சித் துறை அமைச் சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட நிதிதான் என்று அமைச்சர் அவர் கள் சொல்லுகின்றார் கள். மேலும், இந்தத் திருக் கோயிலுக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றார்கள். திருமண நாட் களில் அந்தக் கோயிலில் கிட் டத்தட்ட 200, 300 திரு மணங்கள் தினந்தோறும் நடந்து கொண்டிருக் கின்றன. அதிகமான மக்கள் நெருக்கடி இருக் கின்ற காரணத்தினாலும், இந்தக் கோயிலினுடைய சிறப்பம்சம் தொழில் துறை அமைச்சர் சம்பத் அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், அமைச்சர் அவர்கள் 10 ஆண்டு காலம் தொடர்ச்சியாக அமைச்சராக இருக் கின் றார். வாரம் ஒரு தடவை, இரண்டு தடவை அந்தக் கோயிலுக்கு வந்து செல் கின்றார். பதவியை தக்க வைப்பதற்காகச் செல் கின்றார்கள். அந்த அள வுக்கு, இன்னும் சொல் லப்போனால், இந்தத் திருக்கோவிலுக்கு வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங் களிலிருந் தும் பக்தர்கள் வந்து செல்கின்றார்கள், உதா ரணமாக, முன்னாள் பாரத பிரதமர் தேவ கவுடா அவர்களும், இந் நாள் முதல்வர் குமார சாமி அவர்களும், முன் னாள் முதல்வர் எடி யூரப்பா அவர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து சென்றிருக் கிறார் கள். இன்னும் சொல்லப் போனால், எடியூரப்பா அவர்கள் முதலமைச் சராக இருந்தபொழுது, அந்தத் திருக்கோயிலுக்கு ஒரு கோடி ரூபாயை கர்நாடக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக ஒதுக்கியிருக் கின்றார்கள். அந்த அள வுக்கு சிறப்பு மிக்க கோயிலுக்கு இந்த அரசு ஏதாவது செய்யுமா? என்ற நிலையை விளக் கிக் கூற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன்: முன் னாள் அமைச்சர் கேட் டுக்கொண்டபடி சுற்று லாத் தலங்களில் இன் னென்ன திட்டப் பணிகள் நிறைவேற்ற வேண்டும் என்றுதான் ஓர் அரசாணை வெளி யிடப் பட்டிருக்கின்றது. இருப்பினும், மத்திய அரசினுடைய நிதி ஆதா ரத்தின் துணையோடு உறுப்பினர் அவர்கள் இந்தத் திருக்கோயிலின் சார்பாக கேட்கப்பட் டிருப்பதால், நிச்சயம் மத்திய அரசின் உதவித் திட்டத்தின்கீழ் சுற்றுலா பயணிக ளுடைய வருகை மிக அதிகமாக இருக்கின்ற காரணத் தால், தங்களுடைய கோரிக்கையை சுற்றுலா அலுவலர்களால் உடனடியாக ஆய்வு மேற் கொள்ளப் பட்டு, முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிதி நிலைக் கேற்ப பரிசீலித்து ஆவன செய்யப்படும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்: அந்த திருக் கோவில் அருள்மிகு தேவநாதசுவாமிகளை, அருள்மிகு திருப்பதி வெங்கடாஜலபதியினுடைய அண்ணன் என்று சொல் வார்கள். திருப்பதிக்கு செல்லமுடியாதவர்கள் திருவந்திபுரம் அருள்மிகு தேவநாதசுவாமி கோயி லுக்கு வந்து சென்றால், அருள்மிகு திருப்பதி வெங்கடா ஜலபதி திருக் கோயிலுக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இலட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றார்கள், ஆக, அத்தகைய திருக் கோயிலுக்கு இன்னும் சொல் லப்போனால், பள்ளியில் படிக்கின்ற, கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் தாங்கள் பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டு மென் றால், மலையில் இருக்கின்ற ஸ்ரீ ஹயகி ரிவர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தேர்ச்சி பெறலாம் என்ற எண்ணத்தில் அங்கே அதிகமான மக்கள் வந்து செல்கின்றார்கள். அத்தகைய திருக் கோயிலுக்கு கழிப்பிட வசதி, தங்கும் வசதிகள் இல்லை. இத்தகைய அடிப்படை வசதிக ளையெல்லாம் செய்து தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை மேலும், தலைவர் கலைஞருடைய ஆட்சி யிலே அந்தத் திருக் கோயி லுக்கு திட்டங் களை பல கோடி ரூபாய் அளவில் நிறைவேற்றிக் கொடுத்தார்கள். சுகா தாரத்திற்காக 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத் துவ மனையை உரு வாக்கிக் கொடுத்திருக் கின்றார்கள். அதே போல், உள் ளாட்சித் துறை மூலமாக நிதியை வழங்கியிருக்கி றார்கள். ஆக, இந்த ஆட்சி யிலே எந்தத் திட்டமும் நிறை வேற்றவில்லை என்பது வருந்தக்கூடிய ஒன் றாக இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று தங்க ளுடைய மேலான கவனத் திற்குக் கொண்டு வருகிறேன். அமைச்சர் வெல் லமண்டி ந.நட ராஜன்: நீங்கள் வைத்திருக்கின்ற கோரிக்கையின் படி சுற் றுலாத் துறை அலு வலர்களை அங்கு அனுப்பி, ஆய்வு செய்து அங்கு சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகரிக் கும்பட்சத்தில் என் னென்ன பணிகளை நிறை வேற்ற முடியுமோ, அதையெல்லாம் தமிழ்நாடு முதலமைச் சருடைய மேலான கவ னத்திற்கு எடுத்துச் சென்று நிதிநிலைக் கேற்ப நிச்சயம் பரிசீலிக் கப்படும், செய்து தரப் படும் என்கின்ற உறு தியை இந்த நேரத்தில் உறுப்பினர் அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.