தணிக்கைத் துறை எடுத்துக்காட்டியுள்ள அலங்கோ

சென்னை, ஜூலை 12- செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, தரமற்ற நிலக்கரி இறக்குமதி, கடன் சுமை என அ.தி.மு.க. அரசின் ஊழல் முறைகேடுகள், நிர்வாகத் தோல்விகள் சிரிப்பாய் சிரிக்கிறது என்று கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தணிக்கைத்துறை சுட்டிக் காட்டியுள்ள அலங் கோலங்களை எடுத்துக் காட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :- அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங் கோலங்கள் குறித்து 2016-17 ஆம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்கா ளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளில் வைக்கப்பட்ட இந்த அறிக்கையில் நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகத் தோல்விகள், அரசு கஜானாவிற்கு ஏற்படுத்திய பெருத்த நஷ்டங்கள் என்று அ.தி.மு.க. அரசின் ஒட்டு மொத்த தோல்விகளும் அணி வகுத்து நிற்கின்றன. இந்தத் தோல்விகளும், காலி யாகிக் கொண்டிருக்கும் அரசு கஜானாவும் அ.தி.மு.க. அமைச்சர் களும், அ.தி.மு.க. முதலமைச்சர் களும் இந்த மாநிலத்தில் கோமாளித்தனமான ஆட்சியை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார் கள் என்ற விவரங்கள் அடங்கிய ஒரு என்சைக்ளோபீடியாவாக தற்போது சட்டமன்றத்தில் வைக் கப்பட்டுள்ள சி.ஏ.ஜி. அறிக்கை அமைந்திருக்கிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாளில் உள்ள விலைக்குப் பதிலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாளில் இருந்த விலையை மின் பகிர் மானக் கழகம் கொடுத்ததாலும், தரமில்லாத நிலக்கரியை இறக்கு மதி செய்ததாலும் இந்த மோசமான இழப்பைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது என்று சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகள்! நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண் டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர் மானக் கழகமே கேட்டுக் கொண் டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கைப் பேரதிர்ச்சியாக இருக் கிறது. நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரப் பூர்வமாக இன்றைக்கு முச்சந்திக்கு வந்து நிற் கிறது. குறிப்பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின் வாரியத் திற்கு நஷ்டம் ஏற் பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத் திருக்கிறது. வெள்ளப்பேரிடருக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு! சென்னை மக்களை பேரிடரில் சிக்க வைத்த டிசம்பர் 2015 வெள்ளம் பற்றிய சி.ஏ.ஜி. அறிக்கை அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்விக்கு சான்றாவ ணமாக விளங்குகிறது. டிசம்பர் 2015 வெள்ளப் பேரிடருக்கு அ.தி.மு.க. அரசே முழுப் பொறுப்பு என்று முகத்தில் அறைந்தார் போல் சுட்டிக் காட்டியிருக்கும் அந்த அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவுப்படி 2015 டிசம்பர் 1 ஆம் தேதியன்று குறைந்த பட்சம் ஆறு மணி நேரங்களுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விட்டிருந்தால் போதும். ஆனால் 20,960 கன அடி நீரை திறந்துவிட்டதோடு மட்டுமின்றி, 21 மணி நேரம் அப்படி தொடர்ந்து அன்றைய தினம் தண்ணீரை திறந்து விட்டதால்தான் சென்னை பெருவெள்ளத்தில் சிக்கியது என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஏரியை சார்ந்துள்ள பட்டா நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விடக்கூடாது என்பதற்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீரை அடையாறு ஆற்றில் கண்மூடித் தனமாக திறந்துவிட்டுள்ளார்கள். இதுபற்றி தனியாக விசாரணை நடத்திட வேண்டும் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அறிவுறுத்தியுள்ளது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய தாக இருக்கிறது. தமிழகம் கடனில் மூழ்கும் மிக மோசமான கடனாளி! நிதிமேலாண்மை அவலத்தை கோடிட்டுக் காட்டியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை, மாநில அரசு கடன்கள் எல் லாம் அடுத்த ஐந்து வருடத் தில் திருப்பிச் செலுத்த வேண் டிய நிலைக்கு வரும். அப் போது மிக மோசமான கடனாளி மாநி லமாக மாறி, தமி ழகம் கடனில் மூழ்கிவிடும் என்று கடுமையாக எச்சரித் துள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில் 17.56 சதவிகிதமாக இருந்த மாநிலத்தின் கடன் 2016-17ல் 29.85 சதவிகிதமாக அபாயகரமான அளவிற்கு அதிக ரித்துவிட்டது. கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் 2014-15 ஆம் ஆண்டில் 20.88 சதவிகித மாக உயர்ந்து ஒட்டுமொத்த நிதி மேலாண்மையும் அ.தி.மு.க. ஆட்சியில் சிரிப்பாய் சிரிக்கிறது. இன்றைய தேதியில் இந்தக் கடனும், செலுத்த வேண்டிய வட்டி யும் இன்னும் பல மடங்கு உயர்ந் திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அம்மா உணவகத் திற்காக சப்பாத்தி செய்ய வாங்கிய 15 மெஷின்களில் 12 வேலை செய்யவில்லை, பந்தோபஸ்து டூட்டிக்கான கட்ட ணங்களை உரிய காலத்தில் மாநில காவல் துறைத் தலைவர் மாற்றி அமைக்காததால் அரசுக்கு 97.92 கோடி ரூபாய் நஷ்டம், அரசின் மெத்தனத்தால் 1120 கோடி ரூபாய் வணிக வரி இழப்பு, 25 பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் 2016-17ஆம் ஆண்டில் 9366.11 கோடி ரூபாய் இழப்பு, அ.தி.மு.க. அரசின் அலங்கோல நிர்வாகம்! மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக்கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர் வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருப் பது அ.தி.மு.க அரசின் முதலமைச் சர்களும், அமைச்சர்களும் அனைத்து துறைகளிலும் படு தோல்வியடைந்து விட்டார்கள் என் பதை பட்டவர்த்தனமாக வெளிச் சம் போட்டுக் காட்டியிருக்கிறது. கஜானாவை காலி செய்யும் அ.தி.மு.க. ஆட்சி! ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப்பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அ.தி.மு.க. அரசுகாலி பண்ணியிருக்கிறது என்பது 2016-17 சி.ஏ.ஜி. அறிக்கை யின் வாயிலாக தெரிகிறது. ஆகவே, செம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென்னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடமை களையும் பேரிடருக்குள்ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்ற வாளிகளை உலகிற்கு அடையா ளம் காட்டி, தண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லை யென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.