தாய்லாந்து குகையிலிருந்து 13 சிறுவர்கள் பத்த

பாங்காக், ஜூலை 12- தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையைப் பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர் களின் கால்பந்து பயிற்சி யாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக் கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்க ளுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத் தியாவசியப் பொருள் கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக் குழுவினர் ஆராய்ந்தனர். திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ள மும், சகதியும் புகுந்திருந் தது. இதனால் வெளிச் சமும், வெளியேறும் வழி யும் இல்லாமல் சிக்கியி ருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந் தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர். கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸி ஜன் பற்றாக் குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின் னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச் சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவி னர், இரண்டு கட்டங் களாக 8 சிறுவர்களை மீட்டனர். இந்நிலையில், மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது மீத முள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற் சியாளர் ஒவ்வொருவ ராக மீட்கப் பட்டு குகைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப் பட்டு, மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். அனைவரும் மீட்கப் பட்டுவிட்டதாக தாய் லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய் துள்ளது. கடும் சவால் களைக் கடந்து அனைவ ரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர்.