ஜப்பானில் கனமழை: பலி எண்ணிக்கை 156ஆக உயர்வு!

டோக்கியோ,ஜூலை12- ஜப்பானில் பெய்துவ ரும் கனமழைக்கு உயிரி ழந்தோர் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் மத்திய மற்றும் தெற்கு பகுதி களில் கடந்த சில தினங் களாக பலத்தமழை பெய்து வருகிறது. இதை யடுத்து ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்கயாமா உள்ளிட்ட மாகாணங் கள் கடுமையான பாதிப் புக்கு உள்ளாகி உள்ளன. இப்பகுதியில் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட் டோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப் பகுதிகளில் உள்ள ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து தாழ்வான பகுதிகளில் மழை மற்றும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதையடுத்து, கார்கள், இருசக்கரவாகனங்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும், மூழ்கியும் காணப்படு கின்றன. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த சில தினங்களாக இப்பகுதி களில் பெய்துவரும் கன மழையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளதாக ஜப்பானின் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித் துள்ளார். மேலும் பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி யுள்ளதாகவும், அவர் களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித் துள்ளார். பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டுள்ள தால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.