தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருந

சென்னை, பிப்.12- சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு நிகழ்ச்சியை புறக் கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள் ளது. ஊழல் குற்றவாளி யின் படத்தைப் பேரவை யில் திறப்பதா என அக் கட்சியின் மாநிலத் தலை வர் சு.திருநாவுக்கரசர் கண்டனம் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக் கையில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக் கப்பட்ட ஜெயலலிதா வின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைப்பதன் மூலம் பேரவையின் மாண் பினை கெடுத்து விடக் கூடாது என்று அறிவுறுத் தியுள்ளார். அத்தகைய முயற்சியை எடப்பாடி அரசு கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி யுள்ளார். ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி புறக் கணிக்கும் என்றும் சு.திரு நாவுக்கரசர் தெரிவித்துள் ளார்.