மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்!

சென்னை, பிப்.12- உச்ச நீதிமன்றமே குற்றவாளி என்று தீர்ப் பளிக்கப்பட்டவர் ஜெய லலிதா. அவரது படத்தை சட்டப்பேரவையில் திறப்பது தவறான முன்னு தாரணம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;- தமிழக அரசியல் வர லாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில தலைவர்கள் மற்றும் முதல்வர்களாக இருந்த குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் படங் கள் தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், தந்தை பெரியார், முத்து ராமலிங்கத்தேவர், ராஜாஜி, காமராஜர், அண்ணா, காயிதே மில் லத், எம்.ஜி.ஆர். ஆகிய பத்து தலைவர்களின் படங்கள் இதுவரை திறக் கப்பட்டுள்ளன. தற்போது இரண்டே நாளில் அறிவிப்பு வெளி யிட்டு முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் உரு வப்படம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித் துள்ளது. இந்திய வரலாற்றில் முதலமைச்சராக இருக்கும்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள் ளாகி, உச்சநீதிமன்றமே குற்றவாளி என தீர்ப் பளிக்கப்பட்டவர் ஜெய லலிதா என்பது அனை வரும் அறிந்த ஒன்று. அவர் இயற்கையெய்திய காரணத்தினால், சிறைத் தண்டனை வழங்கப்பட வில்லை. இவ்வாறு ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு சட்டப்பேரவை வளாகத் தில் படம் திறப்பது தவறான முன்னுதாரண மாகிவிடும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவதோடு, இந்நடவடிக்கையை கைவிட வேண்டுமென தமிழக அரசை வலி யுறுத்தி கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செய லாளர் ஜி.ராம கிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.