தி.மு.க. பங்கேற்காது! மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை, பிப். 12- குற்றவாளியின் படத்தை பேரவை யில் திறக்கும் கருப்பு நடவடிக்கையில் தி.மு.க. பங்கேற்காது! என்று கழகச் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11-02-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- செய்தியாளர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் சட்டப் பேரவையில் நாளை (12.02.2018) திறக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறதே? தளபதி மு.க.ஸ்டாலின்: சட்ட மன்ற விதிமுறைகளுக்குட்பட்டு பேரவையை அமைதியாக நடத்துவது மட்டுமே பேரவைத் தலைவரின் கடமை. ஆனால், உச்சநீதிமன்றத்தால் குற்ற வாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கக் கூடியவர்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்தை பேரவையில் அவர் திறந்து வைப்பது, சட்டவிதிகளுக்கு முரணானது. அவசர அவசரமாக படத்தைத் திறப்பது ஏன்? எனவே, இதுவொரு கருப்பு நடவடிக்கை என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கண் டிக்கிறேன். அதுமட்டுமல்ல, குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கக்கூடாது என்று எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழ கன் அவர் கள் தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நாளைய தினம் அந்த வழக்கு விசாரணை வரவிருக்கின்ற காரணத்தால், அவசர அவ சரமாக முடிவு செய்து, தீர்ப்பு வருவதற்கு முன்பாக காலை ஒன்பதரை மணிக்கே படத்தை திறக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளனர். இது சாதாரண காரியமல்ல. காரணம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலி தாவையும் சேர்த்து மொத்தம் 4 பேர் குற்றவாளிகள் என தெளிவாக தீர்ப்பளித்து இருக்கின்றனர். அந்த தீர்ப்பின் 540வது பக்கத்தில் ஹ1 வடி ஹ4 என்பதில் ஏ1 ஆக இருக்கும் அம்மை யார் ஜெயலலிதா அவர்கள் இறந்து விட்ட காரணத்தால் சிறைக்கு செல்ல வில்லையே தவிர, குற்றவாளி என்பதில் மாற்றமில்லை. எனவே, ஒரு குற்றவாளியின் படத்தை பேரவையில் வைப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே, அந்த விழா நடைபெற்றால், அதை திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பதோடு மட்டுமல்ல, அவ்விழாவில் நிச்சயம் பங்கேற்காது. இவ்வாறு கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.