தலைவர் கலைஞர் நினைவிடத்தில்மு.க.ஸ்டாலின் மல

சென்னை, ஆக.10- எழுத்தாளர் - கவிஞர் - நாடக ஆசிரியர் - பத்திரிக்கையாளர் - கட்சித் தலைவர் - ஆட்சித் தலைவர் - உறங்காத படைப்பாளி - ஓயாத போராளி என எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர், நமது உயிரினுமினிய தலைவர் கலைஞர் அவர்கள்! கலைஞர் எனும் ஒரே சொல் லில் ஒரு சரித்திரத்தை, அந்த நான்கே எழுத்துக்களில் ஒரு நூற் றாண்டை அடக்கிய நம் தலைவர் அவர்கள், சென்னை - மெரீனா கடற்கரையில் துயில் கொள்ளு மிடத்தில் தமிழகமெங்கணு மிருந்து கழகத்தினரும், பொது மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று காலையில், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கினார். கழக முன்ன ணியினர் ஏராளமானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். மேலும் தலைவர் கலைஞர் துயிலுமிடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலரும், மலரஞ்சலி செலுத்தினார் கள். தலைவர் கலைஞர் துயிலுமிட மும், மெரீனா கடற்கரைப் பகுதி யும் காமராசர் சாலையும், கழகத்த வர் பெருவெள்ளதால் நிரம்பி வழிகிறது. தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு இப்போது இந்தியாவே துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியப் பிரதமரும் இந்திய அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்று தந்தவர்; அவரின் மறைவுக்கு இந்தியா முழுதும் தேசியக் கொடி கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டிருக்கின்றன. ஆட்சித் திறமை! படைப்பிலக்கிய ஆளுமை! தலைவர் கலைஞர் அவர்களின் மறைவு தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்க காலத் தில் அரசர்களில் சிலர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் சங்க காலத்திற்குப் பிறகு ஆட்சித் திறமையும் படைப்பிலக்கிய ஆளு மையும் கொண்ட ஒரு தலை மையை, தலைவர் கலைஞர் அவர் கள் மட்டுமே தந்திருக்கிறார் என்றால், அது மிகையல்ல. கல்லக்குடிப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து, தமிழுணர்வை வளர்த்தவர்; தமிழின் தகுதிக்குரிய பெருமைக் காகப் பரிதிமாற் கலைஞர் தொடங் கிவைத்த போராட்டத்தை முடித்து வைத்துத் தமிழுக்குச் செம்மொழி அறிந்தேற்பினை இந்திய அரசிடம் பெற்றுத் தந்தவர்; உலகச் செம்மொழிகள் உயராய்வு மையம் கண்டவர்! சமஸ்கிருதம் முதலாக உலகச் செம்மொழிகள் அனைத்துக்கு மான உலகச் செம்மொழிகள் உய ராய்வு மையத்தைத் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தவர்; இலக்கிய நினைவுக்கான ஊற்றுக் கண்கள்! சென்னையில் வள்ளுவர் கோட் டம், பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம், குமரியில் திருவள்ளு வர் சிலை என்று, இலக்கிய நினை வுக்கான ஊற்றுக் கண்களைத் திறந்து வைத்தவர், தலைவர் கலைஞர் அவர்கள்! அறிவியல் தமிழுக்குத் தமிழ் இணைய மாநாடுகளை நடத்திக் கணினித் தமிழின் இன்றைய வளர்ச்சிக்கு அடியெடுத்து வைத்த வர்; ஆட்சித் தமிழுக்குத் தனி அமைச்சகத்தை உருவாக்கியவர். வழிபாட்டு மொழியாகத் தமிழைக் கோயிலுக்குள் கொண்டு சேர்த்த வர்; பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமொழியாகவும் பயிற்று மொழி யாகவும் தமிழை அழைத்துச் சென்றவர்; தமிழ்க் கருவூலங்களை மேடைக்குக் கொண்டு வந்தவர்! நீதிமன்ற மொழியாகத் தமிழைச் சேர்க்க முயன்றவர்; இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழையும் சேர்க்க இறுதிவரை போராடியவர்; தமிழ்க் கருவூலங் களை மேடையில் மட்டுமன்றி, நாடக, திரைப்பட உரையாடல்களின் வழியும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்! தமிழ் படிக்கிறவர்களும் தமிழா சிரியர்களும் மட்டும் போற்றி வந்த மரபுச் செல்வங்களான `தொல்காப் பியப் பூங்கா, சங்கத் தமிழ், குற ளோவியம், `திருக்குறள் உரை என் றெல்லாம் எழுதி, தமிழன்னைக்கு ஆபரணங்கள் பல சூட்டி அழகு பார்த்தவர் அவர். `உடன்பிறப்பே! எனும் ஒற்றைச் சொல்லால் கட்டிப் போட்டவர்! கடந்த கால இலக்கியங்களை நிகழ்காலம் பேசவைத்தவர்; சமுதாய அமைப்பு, நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகளில் மாற்றம் என்று, நவீன அறிவியல் தொழில் நுட்ப அதிரடி விளைச்சலில் வாழும் சமகாலத் தலைமுறையோடு கூட உரையாட இயலாத காலத்தில், ஒரே காலத்தில் பல தலைமுறைக ளோடும் உடன்பிறப்பே! என அழைத்து உரையாடல் நடத்தியவர்; அந்த ஒற்றைச் சொல்லில் உலகத் தமிழர்களை எல்லாம் ஓரணியில் கட்டிப்போட்ட பேராற்ற லுக்கு உரியவர், நமது தலைவர் கலைஞர் அவர்கள்! கடந்த கால இலக்கியங்களின் பெயர்களையும் இலக்கிய மாந்தர் களின் பெயர்களையும் பிறந்த குழந் தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தவர் ; அப்படி, காலங்களையும் தலை முறைகளையும் இணைத் தவர்; தமிழ் மரபுக் கருவூலங்களைக் காப்பாற்றவும் போற்றவும் - வரும் தலைமுறைகளுக்குக் கைமாற்ற வுமான ஒரு தலைவராக இருந்தவர், நமது உயிரினுமினிய தலைவர் கலைஞர்! அவர்கள் இப்போது இல்லை! ஐந்து முறை முதல்வர் எனும் அளப்பரிய சாதனை! 1957 லிருந்து சட்டமன்ற உறுப் பினர்; 50 ஆண்டுகளாகத் தி.மு.க. தலைவர். ஐந்துமுறை முதலமைச்சர் - இவை அரசியலில் அவர் புரிந்த மகத்தான சாதனைகள். பாராட்டும் பழியும் கலந்த பதவி களால் மட்டும் தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டப்படவில்லை. களத்தில் நின்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்திருக் கிறார். கலைஞரின் வாழ்க்கை; இளைஞர்களின் நம்பிக்கை விளக்கு! திருக்குவளை கிராமத்தில் தொடங்கி, டெல்லிக் கோட்டை வரையிலான அதிகாரப் பயணத் தில், கலைஞரின் வாழ்க்கை, இளை ஞர்களின் நம்பிக்கை விளக்கு எனின் அது மிகையல்ல! தமிழுக்குப் புதுவாழ்வு தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்! திரைப்படத் தமிழுக்குத் திசை காட்டியவர்; `பராசக்தி வழியாக திரைப்பட வரலாற்றைத் திருப்பி விட்டவர். `அரசியல் எனும் கால்பந்தாட் டத்தில், பந்தையும் மைதானத் தையும் பார்வையாளர்களையும் கூடப் பக்குவப்படுத்திக் களத்தில் ஆடிக் கொண்டிருந்தவர், புதிது புதிதாக வருகிறவர்களோடும் போராடத் தயங்காதவர், தலைவர் கலைஞர் அவர்கள்! சலிப்பறியா உழைப்பாளி! சலிப்பறியாத உழைப்புக்கும் எழுதுவதற்கும் படிப்பதற்கும் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கும் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தவர்; எழுத்தாளர் - கவிஞர் - நாடக ஆசிரியர் - பத்திரிக்கையாளர் - கட்சித் தலைவர் - ஆட்சித் தலைவர் - உறங்காத படைப்பாளி - ஓயாத போராளி என்று, எத்துறை தொட்டாலும், அத்துறையில் வித்த கம் காட்டிய வித்தகர் , இந்திய அளவில் தலைவர் கலைஞர் அவர்கள் மட்டும்தான்! தமிழுணர்வின் தள்ளாட்டம் போக்கும் தலைவரின் எழுத்துக்கள்! நடை தள்ளாடலாம், தடைப்பட லாம் - ஆனால் நான் பெற்றுள்ள தமிழ் உணர்வுக்குத் தள்ளாட்ட மில்லை என்று சொன்னார், தலைவர் கலைஞர், அவர்கள் இப்போது இல்லை. இனி அவர் பெயரே, தமிழுணர்வின் தள்ளாட் டத்தைப் போக்க வேண்டும். நேற்று முன்தினம் மாலை, சென்னை - மெரினா கடற்கரை யில், அண்ணா நினைவிடத்திற்கு அருகில் தலைவர் கலைஞர் அவர் களின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை தொட்டே, கழகத்தினரும், பொது மக்களும் தலைவரின் நினைவிடம் நோக்கி வந்து குவியத் தொடங் கினார்கள். கழகத்தினர், அவ்விடத்தைப் பிரிய மனமின்றி, அங்கேயே இருந்து வருகிறார்கள். கழகத்தினர் ஒருவரை ஒருவர் முன்பின் அறிந்திரார் எனினும், தலைவரின் தொண்டு, தியாகம், ஆற்றலை பலவாறு புகழ்ந்தும் நெகிழ்ந்தும் பேசிய வண்ணம் இருக்கிறார்கள். இக்காட்சி கண் டால் கண்கள் குளமாகின்றன. கழகத்தவர் அனைவரையும் `உடன்பிறப்புகள் எனும் ஒற்றைச் சொல்லால், ஒன்று திரட்டி, ஒருவரோடு ஒருவர் அண்ணன் - தம்பி போன்ற பாச உணர்வோடு பழகிடும் பண்பினை நல்ல பாங் கினை, கழகத்தவர் உள்ளங்களில் எல்லாம் விதைத்து, அந்த உன்னத உணர்வினை, நாள் தோறும் தமது பேச்சாலும், எழுத் தாலும் வளர்த்த வரன்றோ; தலைவர் கலைஞர் அவர்கள்! இதுபோன்ற தலைவரும் இல்லை! தொண்டர்களும் இல்லை! கலைஞரைப் போல, இனி ஒரு தலைவர் வையகத்தில் தோன்றப் போவதுமில்லை, கலைஞருக்கு வாய்த்தது போன்ற அப்பழுக்கற்ற தொண்டர்கள், தங்கள் தலை வரை தங்கள் உயிரினும் ஒருபடி மேலாகக் கருதும் மாசு மருவற்ற தொண்டர்கள் வேறு எவருக்கும் வாய்த்திடப் போவதுமில்லை ``என அரசியல் விமர்சகர்களும், மற்ற கட்சிகளின் தலைவர்களெல்லாம் கூட கூறுமளவுக்குப் பெருமைக் குரியது; தலைவர் கலைஞர் அவர்களுக்கும் - தொண்டர் களுக்கும் இடையிலான உறவு! நேற்று காலையில், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் துயிலுமிடம் சென்றார், அங்கு, மலர் தூவி வணங்கினார். தளபதி அவர்களுடன் சென் றிருந்த கழக முன்னோடிகளும், தலைவர் துயிலுமிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக அரசியல் கட்சி களின் தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து உள்பட ஏராளமான பெருமக்கள், தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி வணங்கினார்கள். தங்கள் உயிர்த் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி! மேலும், கழகத்தினரும், பொது மக்களும் எனப் பல்லாயிரக் கணக்கானோர், தலைவர் கலைஞர் அவர்களின் நினை விடத்தில் மலர்தூவி வணங்கி, தங்கள் உயிர்த் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலியைக் காணிக் கையாக்குகிறார்கள்.