திருமதி. சோனியா காந்தி புகழாரம்!

புதுடெல்லி, ஆக.10- கலைஞரின் மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவர் எனக்கு தந்தையை போல் இருந்தார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு எழுதிய கடிதத்தில் ஐக் கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அவர்கள் உருக்க மாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தமது கடிதத்தில் ``அரசியல், பொது நலனில் நாட்டின் உயர்ந்த தலைவராக விளங்கியவர் கலைஞர் என்றும் கூறியுள்ளார். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலி னுக்கு, சோனியா காந்தி அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரசியல் உலகத்திலும், பொது சேவையிலும் உன்னதமான தலை வராக கலைஞர் இருந்தார். அவரது மறைவு, எனக்கு தனிப்பட்ட முறை யில் பெரிய இழப்பு. அவர் எப்போ தும், என்னிடம் மிகுந்த அன்பையும், பரிவையும் காட்டியவர். அதை என்னால் மறக்க முடி யாது. அவர் எனக்கு தந்தையை போன்றும் இருந்தார். கலைஞர் போன்ற நபரை நாம் மீண்டும் பார்க்க முடியாது. அந்த அரசியல் மேதை, அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இல் லாதது இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு. தமிழர் பண்பாட்டை உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்தவர்! கலைஞர் அவர்கள் மிகச்சிறந்த இலக்கியவாதி. தமிழகத்தை வளமாக்கியதிலும், பண்பாட்டு மற்றும் கலையை வளர்த்து உலகளவிலான அங்கீகாரம் கிடைக்கச் செய்ததிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். கலைஞர் அவர்கள் தனது நீண்ட சிறப்பான வாழ்க்கையில், சமூக நீதிக்காகவும், சமத்து, வத்துக்காகவும், தமிழகத்தின் வளர்ச் சிக்காகவும், பிற்படுத் தப்பட்ட ஒவ்வொரு வரின் நலனுக்காகவும் பாடுபட்டார். கலைஞரை முழு ஈடுபாட்டுடன் தாங்கள் கவனித்தது பாராட்டத்தக்கது! கலைஞர் அவர்கள் முழுமை யான, மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தார். தற்போது கஷ்டங்களில் இருந்து விடுபட்டுள்ளார். அவர் உடல்நிலை குன்றிய சமயத்தில் நீங்கள் முழு ஈடு பாட்டுடன் கவனித்துக் கொண்டது பாராட்டத்தக்கது. இவ்வாறு சோனியா காந்தி அவர்கள் கூறியுள்ளார். மேலும் தனது கடிதத்தில் சோனியா காந்தி அவர்கள் கூறு கையில், தமிழக அரசிலும், அரசிய லிலும் கலைஞரின் நீண்டகால பணி, மிகச் சிறந்த மற்றும் சகிப்பு தன்மையுடன் கூடிய பாரம்பரி யத்தை விட்டுச் சென்றுள்ளது. அதற்காக அவர் எப்போதும் போற் றப்படுவார், நினைவு கூரப்படு வார். நீங்கள் (மு.க.ஸ்டாலின்) தனது பாரம்பரியத்தை மேலும் பேணிக் காத்து, முன்னெடுத்து செல்வீர்கள் என கலைஞர் நம்பினார். அதையே நானும் நம்புகிறேன் என்று கூறி யுள்ளார்.