பிரதமர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் த

டெல்லி, ஆக. 10- தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை யில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டு அஞ்சலி செலுத்தப் பட்டது. தலைவர் கலைஞர் அவர்கள் முதுமையால் ஏற் பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந் தார். அவர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காவேரி மருத்துவ மனையில் உயிரிழந்தார். தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு, தெலுங் கானா முதல்வர் சந்திரசேகரராவ், புதுவை முதல்வர் வி. நாராயணசாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள் ளிட்ட பல தேசிய தலை வர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வும் இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு நாடாளுமன் றத்தில் லோக்சபா, ராஜ்ய சபா ஆகிய இரு அவைக ளும் இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் துக்கம் அறிவித்தது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட் டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச் சரவைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டம் தொடங் கியதும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அமைச்ச ரவைக் கூட்டத்தில் தலை வர் கலைஞர் அவர் களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.