வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் புகழார

சென்னை, ஆக.10- தலைவர் கலைஞர் அவர்கள் விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமி நாதன் குறிப்பிட்டுள் ளார். இது குறித்து டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் வேளாண் விஞ்ஞானியும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக் கட்டளையின் நிறுவனருமான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த பங்களிப்புகளில் அவரு டைய முக்கியமாக நினைவு கூர்ந்து குறிப்பிடப்பட வேண்டிய சாதனை களில், புகழ் பெற்று விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக் கழகங்களை அமைத்தது, மாநில உயிரி தொழில் நுட்ப (பயோ டெக்னாலஜி) சபை அமைத்தது, பால் நுண்ணுணர்வு கல்வி நிறுவனங்களான பெண்கள் உயிரி தொழில்நுட்பப் பூங்கா போன்றவற்றை அமைத்தது ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். இவை விஞ்ஞானத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை காட்டும் உதார ணங்களாகும். பசி இல்லாப் பகுதித் திட்டத்தை உருவாக்கியவர்! தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பி லிருந்து சத்துணவுப் பாதுகாப்புக்கு முன்னேற வேண்டும் என்பதில் கூட அவர் மிகவும் கவனமாக இருந்தார். இந்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப் படுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தலைவர் கலைஞர் அவர்கள் 1990 ஆம் ஆண்டில், மகாகவி சுப்பிர மணிய பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில் வறுமையால் தூண்டப்படும் பசியைப் போக்க, பசி இல்லாப் பகுதித் திட்டம் ஒன்றைத் தொடங்கினார். விஞ்ஞானத்துக்கு தமிழ் இலக்கியதோடு திருமணம்! அவர் விஞ்ஞானத்துக்கு தமிழ் இலக்கியத்தோடு திருமணம் செய்து வைத்தார். 2010ல் நடை பெற்ற உலகத் தமிழ் (தமிழ் செம்மொழி) மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் மரபு சார்ந்த பாரம்பரிய பூங்காக்களை சங்கத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படை யில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணை களின் அடிப்படையில், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து மண்ட லங்களிலும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். கலைஞர் அளித்த இடத்தில்தான் ஆராய்ச்சி அறக்கட்டளை! அவருடைய நோக்கம் தமிழ் அறிஞர்களின் உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் செய்துள்ள சாதனைகள் பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்தவும், அதில் இந்த 5 திணைகளிலும் காணப்படும் தனித்துவமான தாவரங்களையும், மிருக வகைகளையும் பாதுகாத்து- பராமரித்து எதிர்காலச் சந்தியின ருக்காக வைத்திருக்கச் செய்வ தாகும். அவர் விஞ்ஞானிகள் மீது வைத் திருக்கும் மதிப்பைக் காட்டுவதற்கு என்னுடைய வாழ்க்கையில் 1989ல் நடந்த நிகழ்ச்சியை உதாரணமாகக் குறிப்பிட விரும்புகிறேன். அப்போது தரமணி பகுதியில் விஞ்ஞான நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு நிலம் ஒதுக்கும்படி கோரி நான் அவரை அணுகிய போது, அவர் என்னிடம், அவரிடம் நான் கேட்பதற்குப் பதிலாக அவர் அந்த நிறுவனத்தை அமைப்பதற்கு என்னை அழைத்திருக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு கூறி அவர் அந்த நிலத்தை என்னிடம் ஒப்படைத்தார். அந்த இடத்தில் தான் இப்போது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. ஒரு மாபெரும் தமிழறிஞரும், நிலையான வளர்ச்சிக்கு விஞ் ஞானத்தைப் பயன்படுத்துவதற்கு வலிமையாக வாதாடுபவருமான தலைவர் கலைஞர் அவர்கள் விஞ் ஞானத்தை பொது மக்கள் நலனை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தும் அரசியல் தலைவர்களிலேயே அவர் மிக உயர்ந்தவராக இருக்கிறார். இவ்வாறு வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.