அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் புகழாரம்!

நியூயார்க், ஆக. 10- தி.மு.க. தலைவரும், முன் னாள் முதல்வருமான தலை வர் கலைஞர் அவர்களின் மறைவுச் செய்தியை அமெ ரிக்காவில் இருந்து வெளி யாகும் ``நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள் ளது. தலைவர் கலைஞர் அவர்களின் மறைவு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தாக் கத்தை ஏற்படுத்தி யுள்ளது. தேசிய ஊட கங்கள் அனைத்தும் தலைவர் கலைஞர் அவர்களின் மறை வுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. வடமாநில செய்தி களுக்கு மட்டும் முக்கி யத்துவம் கொடுக்கும் சேனல்கள் கூட தலைவர் கலைஞர் அவர் களின் மறைவு குறித்து விரி வான செய்தி வெளியிட்டன. இந்நிலையில் அமெரிக்கா வில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ``நியூ யார்க் டைம்ஸ் இதழில் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுச் செய்தி வெளியிட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- சினிமா, அரசியல் என பன்முகத் திறமை கொண்ட இந் தியாவின் மூத்த அரசியல்வாதி தலைவர் கலைஞர் அவர்கள் (வயது 95). உடல் நலக் குறை வால் சிகிச்சை பெற்று வந்து நேற்று முன்தினம் மறைவெய் தினார். கருணாநிதி நேற்று காலமானார். அவர் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டி, மருத் துவமனை வளாகத்தில் ஆயி ரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் காத்துக் கிடந் தனர். 1950-ம் ஆண்டின் முற் பகுதியில், தமிழக திரை உலகில் அசைக்க முடியாத சக்தியாக கலைஞர் அவர் கள் விளங் கினார். அரசியலில் 5 தலைமுறை களாக கோலோச்சி வந் துள்ளார். 1969-ம் ஆண் டில், தமிழக முதல் வராக பதவி ஏற்றார். 5 முறை முதல்வர் பதவி என 19 ஆண்டு கள் முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளார். கலைஞர் அவர்களின் மறைவு தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது.