சிறுபான்மையின மக்களின் நம்பிக்கை நாயகன் கல

சென்னை, ஆக. 10- தலைவர் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன் என்றும், கலை ஞர் அவர்கள் பேச் சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக திறமை மிக்கவர் என்றும் சிறுபான்மை யின மக்களின் நம் பிக்கை நாயகன் கலைஞர் அவர்கள் என்றும் இந் திய சமூக நீதி இயக்க நிறுவனத் தலைவர் பேரா யர் எஸ்றா சற்குணம் விடுத்துள்ள அறிக்கை யில் புகழாரம் சூட்டியுள் ளார். இதுகுறித்து அவரது அறிக்கை வருமாறு:- இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர், திராவிட மும் மூர்த்திகளில் மூன்றா மாவர், எனது அரசியல் ஆசான்..! என் போன்ற சாமானியர்களையும் ஊக்குவித்து திராவிட இயக்கத்தின் இலட்சி யத்தை அடைய தமிழின மக்கள் அனை வரையும் ஒருங்கிணைத் தவர். சமயச் சிறுபான் மை யினரின் நம்பிக்கை நாயகன். தமிழ்நாட்டை ஐந்து முறை முதல்வராக ஆட்சி செய்திட்டவர். நம் தமிழினத் தலைவர் மூதறிஞர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு என் சார்பாகவும், நான் சார்ந்துள்ள லட்சகணக் கான மக்களை கொண் டுள்ள இந்திய சுவிசேட திருச்சபையின் சார்பா கவும், இந்திய சமூகநீதி இயக்கம் சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதா பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் இப் போது ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை நிரப்பப்போகிறவர் யார்? என்று பல்வேறு ஊடகங் களைச் சார்ந்தவர்களும் கேள்விகள் கேட்ட வண்ணம் இருக்கின் றனர். தமிழகத்தின் இந்த வெற்றிடத்தை நிரப்பிட, கலைஞர் விட்டுசென்ற பணியினைத் தொடர்ந்து அதே விவேகத்தோடும் ஆற்றலோடும் செய்திட, செயல் தலைவர், சட்ட சபையின் எதிர்க்கட்சி தலைவர், தவிர வேறு யாருமே இல்லை, இல்லை என்பதனை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். கலைஞர் அவர்களது உள்ளம், பேரறிஞர் அண்ணாவின் உள்ளம், தந்தை பெரியாரின் உள் ளம். தனது 14-ம் வயதிலிருந்து, தமது பேச் சாற்றல், எழுத்தாற்றல் நிர்வாக திறமை ஆகிய வற்றில் அவருக்கிணை அவரேதான் எனினும் இத்தனை ஆண்டுகள் கலைஞரோடிருந்து, தனது இளம் வயதி லேயே அவரது தந்தை சார்ந்திருந்த, திராவிட இயக்கத்தின் அரசியல மைப்பான தி.மு.கழகத் தில் தன்னை இணைத் துக்கொண்டு தொண் டாற்றியவர் நமது தளப தியார். ஏதோ சுழல் காற்றினால் மேலே பறந்து வந்து கோபு ரத்தில் ஒட்டிக்கொண்டு விட்ட கிழிந்த காகிதமல்ல அவர். தனது பண்பாலும் ஆற்றலா லும் உயர்ந்தவர். பழம் பெரும் அரசியல் இயக்க மாம் தி.மு.க. வரலாற்றின் முதல் அத்தியாயத்தை பேரறி ஞர் அண்ணா எழுதி னார், நீண்ட தொரு இரண்டாம் அத் தியாயத்தை கலைஞர் தீட்டினார், மூன்றாம் அத்தியாயத்தை எழுதிட அண்ணன் தளபதியார் காத்துக் கொண்டி ருக்கிறார். வாழ்க தமிழகம் ! வளர்க திராவிட இயக்கம் ! தொடரட்டும் தி.மு.க. - வின் ஆட்சி என்று கூறிட விரும்பு கின்றேன். இது என்னு டைய இரங்கல் செய்தி யோடு நான் எழுதிடும் ஒருசில வரிகள். நீண்ட தொரு ஓவியத் தைப் பின்னர் தீட்டிட விழை கின்றேன். இது இந்திய சமூகநீதி இயக் கத்தின் சார்பாக நான் தெரிவித் திடும் இரங்கல் செய்தி ! வாழ்க கலைஞர் ! இவ்வாறு பேராயர் எஸ்றா சற்குணம் விடுத் துள்ள இரங்கல் செய்தி யில் குறிப்பிட்டுள் ளார்.