ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோவில் இளையராஜ

சென்னை, ஆக.10- கடைசி சிறந்த அரசி யல்வாதி, கடைசி சிறந்த சினிமா எழுத்தாளர் கலைஞர் என புகழாரம் சூட்டியுள்ளார் இசை யமைப்பாளர் இளை யராஜா. ஆஸ்திரேலியாவில் இருக்கும் இளையராஜா, அங்கிருந்து நேற்று வெளி யிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:- தமிழ்மக்கள்... நமக் கெல்லாம் துக்க தினமாக ஆகிவிட்டது. கலைஞர் ஐயா மறைந்தது நமக்கெல் லாம் துக்க தினமேதான். இந்த துக்கத்தை எப்படி நாம் மாற்றிக் கொள்ளப் போகிறோம். எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்பது தெரியவில்லை. அரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் தலைவர் ஐயா கலைஞர் அவர்கள். சினிமா துறையிலே சுத்தமான தமிழ் வசனங் களை மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய கலைஞர், கடைசி திரைக் கதை வசனகர்த்தா ஆவார். தமிழ், அரசியல், இலக்கியம், கலை என எல்லா துறையிலும் தலை சிறந்து விளங்கி ய அவரது இழப்பு ஈடு செய்ய முடி யாதது. ஆஸ்திரேலி யாவில் இசை நிகழ்ச்சி நடத்த 6 மாதங்கள் முன்பே திட்டமிடப் பட்டது. இதனால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியவில்லை. இவ்வாறு இளைய ராஜா கூறினார்.