கே.எம்.காதர் மொகிதீன் புகழாரம்!

சென்னை, ஆக.10- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப் பதாவது:- தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் தமது 95வது வயதில் 07.08.2018 அன்று நம்மை விட்டு பிரிந்து விட்ட துக்க செய்தி தமிழின மக்களுக்கு பேரிடியாக அமைந்து விட்டது. திருவாரூர் திருக்கு வளையில் தோன்றிய இந்த தங்கத் தமிழ் செல்வர், தங்கத் தமிழில் ஊறி தமிழக சரித்திரத் தில் தோய்ந்து அனைத்து பேரிலயக்கி யங்களிலும் மூழ்கி, உலகின் எல்லா தத்துவங்களின் ஆழத் தையும், வென்று தனக் கென ஒரு தனி அறிவு ஞானப் பாதையை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்த அற் புத தலைவர் கலைஞர். அண்மைக் காலத்து தமிழக, ஏன் இந்திய வர லாற்றில் கலைஞருக்கு ஈடாக, இணையாக, ஒப் பாக, ஒருவரையும் இனங் காட்ட முடியாது என்ற அளவுக்கு சாதனை படைத்த சரித்திர நாயகராக திகழ்கிறார். தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க் கப்பட்டு சுயமரியாதை சுடராகத் திகழ்ந்து பேர றிஞர் அண்ணாவால் வார்த்தெடுக்கப்பட்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் , மூதறி ஞர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கர்ம வீரர் காமராஜர், வர்க்க போராளி ஜீவா னந்தம் போன்ற மகத்துவ மிக்க தலைவர்களின் பேரன்பைப் பெற்று உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக பரிணமித்த கலைஞர் அவர்களின் வாழ்வு வருங்கால இளை ஞர்களுக்கு அழகியதோர் முன் மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறது. திராவிடத் தத்துவக் தலைவராக, நிறைவான ஜனநாயகவாதியாக, பண்பட்ட பகுத்தறிவு சூரியனாக, மக்கள் சேவையில் இமய மலை போல் உயர்ந்தவராக வாழ்ந்து காட்டிய கலைஞர் அவர்களின் ஒவ் வொரு வார்த்தையும் வெற்றி வாழ்வுக்கான படி களாக அமைந்திருக் கின்றன. இந்திய யூனியன் முஸ் லிம் லீக்கின் பேராதரவா ளராக இருந்த கலைஞர் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் உள் உணர்வுகளை உணர்ந்து, புரிந்து, தெரிந்து அவர் களுடைய உரிமைகளைப் பாதுகாத்து கொடுத்த பெருமை அவரைச் சாரும். 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு, உருது மொழிக் கான அகாடமி, வெளி நாடுவாழ் நல இயக்குன ரகம், சிறுபான்மை நல வாரியம், சிறுபான்மை பொருளாதார மேம் பாட்டு கழகம், காயிதே மில்லத் பெயரால் கல்லூரிகள், காயிதே மில்லத் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா, மீலாது விழாவுக்கு அரசு விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது, முஸ்லிம் மகளிர் சுய உதவி சங்கத்திற்கு மானி யம், இப்படி எண்ணற்ற சமூக நலத்திட்டங்களை சிறுபான்மை சமுதாயங் களுக்கென்றே வகுத்து நடைமுறைப்படுத்திய மாபெரும் மனிதநேய தலைவர் ஆவார். கலைஞர் அவர்களின் ஜனநாயக பாதையில், சட்ட ரீதியான போக்கில் , அறம் சார்ந்த ஆக்க பூர்வமான அரசியலில், மதங்களைக் கடந்து இத யங்களை ஒன்றிணைக் கும் மதச்சார்பற்ற லட்சி யத் தில் தமிழகமும், இந்தி யாவும் செல்வதற்கான வெல்லும் வழியை எனச் சொல்லிய அந்த சுந்தரத் தமிழர் கலைஞர் என் றென்றும் வரலாற்றில் வாழ்வார்; அவரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவருடைய மறைவு தமிழகத்தின் சூரியன் மறைந்தது போல் இருக்கிறது. அவர் நம்மிடையே இல்லாதது இமய மலையே இடம் பெயர்ந்து போனது போல் இருக்கிறது. அவரை நினைக்கும் போதெல்லாம் ஒவ்வொ ருவரும் தன்னிடத்தில் இருந்த ஏதோ ஒன்றை இழந்து விட்டதாகவே எண்ணுகிறார்கள். அவர் காட்டிய வழியில் செல்வதன் மூலமோ தமிழக மக்களா கிய நாம் ஆறுதலும், பேறுதலும் பெற முடியும். இந்திய திருநாட்டில் சரித்திரம் படைத்த அனைத்து அரசியல் தலைவர்களோடும் நெருங்கிய நட்போடு உறவுகொண்டு அரசியல் நடத்திய பெருமை கலைஞருக்கே உண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் பல் லாண்டு பல்லாண்டு தனது லட்சிய பயணத் தில் செல்ல வேண்டும்; எல்லா தரப்பிலும் வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையோடு தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களையும் அவர்களோடு தோள் கொடுத்து துணை நிற்கிற தொண்டர் தில கங்களையும் உருவாக்கி வருங்கால தமிழகத்திற்கு உறுதியான நம்பிக்கை யையும் தந்தவராகவே கலைஞர் நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இவ்வாறுபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.