முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரி, ஆக.10- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு புதுவை அமைச்சரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் களிடம் கூறியதாவது :- புதுவை அமைச்சரவையில் தி.மு.க. தலைவர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதுவை அரசு சார்பில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் வருகிற 13ந் தேதி வரை ஒரு வார துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப் படுகிறது. தமிழுக்கு பாடுபட்டவர் தலைவர் கலைஞர். அவரது பெயரில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இருக்கை அமைக்கப்படும். இதற்கான நிதியை புதுவை மாநில அரசு வழங்கும். இதன் மூலம் உலக அளவில் உள்ள அறிஞர்கள் தமிழ் ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். காரைக்கால் பகுதியில் உள்ள பட்ட மேற்படிப்பு மையத்துக்கும், காரைக்கால் பைபாஸ் சாலைக் கும் கலைஞரின் பெயர் சூட்டப் படும். புதுவையிலும் ஒரு தெருவுக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். மேலும், புதுச்சேரியில் அவ ருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும். இதற்கான இடத்தைக் குழு அமைத்து முடிவு செய்வோம். அவர் முதல்-அமைச்சராக இருந்த போது புதுச்சேரிக்கு கேட்டதையெல்லாம் தந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க. வினருக்கும், தமிழக மக்களுக் கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.