பேருந்துக் கட்டண உயர்வை கடுமையாக உயர்த்தி ம

சென்னை, பிப்.13- தமிழகத்தில் குதிரைபேர மை னாரிட்டி எடப்பாடி அரசினால் திடு திடுப்பென்று உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று மாநில மெங்கும் கண்டனப் பொதுக்கூட் டங்கள் நடைபெறுகின்றன. மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்களில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார்கள். தி.மு.கழகத்தின் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூரிலும், முதன் மைச் செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தென் சென்னையிலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. மதுரையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் வட சென்னையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விழுப்புரத்திலும், முன்னாள் எம்.பி. தா.பாண்டியன் வட சென்னையிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேரா சிரியர் கே.எம். காதர்மொகிதீன் ஈரோட்டிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் காஞ்சிபுரத்திலும், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா. நெல்லையிலும் கண்டனப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். இது தவிர அனைத்து மாவட் டங்களிலும் அனைத்துக் கட்சி களின் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று பொதுக் கூட்டங்களில் உரையாற்று கின்றனர். (இதன் விவரப் பட்டியல் தனியாக உள்ளே வெளியிடப்பட் டுள்ளது). தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி இரவு திடீரென்று ரூபாய் 3,600 கோடி அளவிற்கு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதுடன், அதை மறுநாள் முதல் கொண்டே குதிரைபேர அரசு அமல்படுத்திடத் தொடங் கியது. இதனால் பொதுமக்கள் சொல் லொணா துயருக்கு உள்ளானதை கருத்தில் கொண்டு, கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சி கூட் டத்தை அண்ணா அறிவாலயத் தில் கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். பொதுமக்கள் படும் துயரத்தை குதிரை பேர அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட் டங்களும், மாவட்டத் தலைநகரங் களில் அனைத்துக் கட்சித் தலை வர்கள் பங்கேற்கும் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சாலை மறியல் நடத்தப் போவதையறிந்த குதிரை பேர மைனாரிட்டி அரசு, `இனி பேருந் துக் கட்டணத்தை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிற நிலையிலிருந்து சற்று இறங்கி, சிறி தளவு கட்டணத்தை மட்டும் குறைத்தது. ஆனாலும் பொதுமக் கள் திருப்தி அடையும் வகையில் அந்தப் பேருந்துக் கட்டணக் குறைப்பு இல்லை என்பதால் மக்க ளின் மனநிலையை எதிரொலிக் கும் வண்ணம் ஏற்கனவே திட்ட மிட்டபடி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் சாலை மறியல் சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. தி.மு.க. தோழமைக் கட்சிகள் பங்கேற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாநிலம் முழு வதும் 6 லட்சத்திற்கு மேற்பட்ட வர்கள் பங்கேற்று, சிறை புகுந் தனர். கழகச் செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர் களும் இந்தச் சாலை மறியலில் பங்கேற்று சிறைகளில் அடைக் கப்பட்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங் கள் மற்றும் சாலை மறியலில் பொதுமக்களும், கட்சித் தொண்டர்களுடன் பெருமளவில் பங்கேற்று குதிரைபேர அரசுக்கு தங்களது எதிர்ப்பினை வெளி யிட்டனர். அதைத் தொடர்ந்து மீண்டும் பிப்ரவரி 6 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அடுத்த கட்ட நட வடிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவா தித்தார். அந்தக் கூட்டத்தில், இது தொடர்பாக போராடிய மாணவர் கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், போக்கு வரத்து ஊழியர்கள் மீது குந்தகம் விளைவிக்கும் பிற் போக்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, மாவட் டத் தலைநகரங்களில் கண்ட னப் பொதுக் கூட்டங்கள் நடத்துவது குறித்து கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உயர்த்தப்பட்ட போக்கு வரத்துக் கட்டணத்தை திரும்பப் பெற அடாவடியாக மறுத்து வரும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங் களில் 13-2-2018 (செவ்வாய்) அன்று மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இதையடுத்து இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.