மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோ

சென்னை, பிப்.13- பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். சென்னையில் பேருந் துக் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலை மையில், ஏராளமானோர் பதாகைகளை ஏந்திய வாறு முழங்கங்களை எழுப்பினர். சாதாரண மக்களை துன்பத்தில் ஆழ்த்திய அ.தி.மு.க. அரசுக்கு அவர் கள் கடும் கண்டனம் தெரி வித்தனர். கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை, பாதி வழியில் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரை யும் கைது செய்தனர்.