உயர்நீதிமன்றம் ஏற்பு!இன்று விசாரணைக்கு வரு

சென்னை, பிப். 13- அரசமைப்பு சட்ட விதிகளை மீறியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதி ராகவும் ஊழல் குற்ற வாளி ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசு திறந்து வைத்துள் ளது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு இன்று (செவ் வாய்க்கிழமை) விசா ரணைக்கு வருகிறது. தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் களங்கம் ஏற்படும் வகை யில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப் படத்தை பேரவைத் தலைவர் நேற்று திறந்து வைத்துள்ளார். சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங் கிரஸ் உள்ளிட்ட பல் வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கடும் எதிர்ப்பை மீறி, எடப்பாடி பழனிசாமி அரசு ஜெயலலிதா படத்தை பேரவையில் திறந்துள்ளது. இந்தப் படத்தை அகற்ற உத்தரவிடக் கோரி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழ கன் சார்பில் மூத்த வழக் கறிஞர் வில்சன் நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் னிலையில் முறையிட்டார். உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப் பளிக்கப்பட்ட ஜெய லலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக் கூடாது எனக் கோரி, ஏற்கனவே ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத் தில் இருப்பதையும் வில் சன் சுட்டிக் காட்டினார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், புதிய மனுவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தோடு, வழக்கு விசா ரணை இன்று (13.2.2018) நடைபெறும் என்று தெரி வித்தனர்.