மாவட்டப் பொறுப்பாளர்கள் நா. கார்த்திக் - மு.ம

கோவை, பிப்.13- பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று (பிப்ரவரி 13) மாலை 6.00 மணியளவில் தி.மு.க. மற்றும் தோழ மைக் கட்சிகள் சார்பில், தேர் நிலைத் திடல், ராஜவீதியில் மாபெரும் கண்டன பொதுக் கூட் டம் கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் தோழ மைக் கட்சி தலைவர்கள் சிறப்புரை யாற்றுகிறார் கள். இதுகுறித்து மாவட் டப் பொறுப்பாளர்கள் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., மு.முத்துசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ஏழை - எளிய, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக் கும் வகையில் பேருந்துக் கட்டணங்களை உயர்த் திய ஆளும் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழ மைக் கட்சிகள் சார்பில் இன்று (பிப்ரவரி 13) மாலை 5.00 மணியளவில் கோவை, தேர் நிலைத் திடல், ராஜவீதியில் மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடை பெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத் தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன், தோழமைக் கட்சி தலை வர்களும் சிறப்புரை யாற்றுகிறார்கள். இந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்தில் தோழமைக் கட்சியினர், மாவட்டக் கழக நிர் வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலை மைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் கள், பகுதிக் கழகச் செய லாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப் பாளர் கள், பகுதிக் கழக நிர்வா கிகள், வட்டக் கழக நிர் வாகிகள், கழகத் தின் மூத்த முன்னோடி கள், கழகச் செயல் வீரர் கள், கழக உடன்பிறப்புக் கள், பொதுமக்கள் அனை வரும் பெரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கோவை மாநகர் மாவட்டப் பொறுப் பாளர்கள் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., மு.முத்துசாமி ஆகியோர் தெரிவித் துள்ளனர்.