முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் வழக்கு! ஸ தேதல் ஆணையம் உத்தரவு!

புதுடெல்லி, ஜூன் 19 - ஆர்.கே.நகர் இடைத் தேர்த லுக்கு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்ட புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் கள் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச் சாமிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப். 12 ஆம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்ட மிட்டது. ஆனால் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் அளவுக்கு ஆர்.கே .நகர் இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச் சர்களும், முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் மற்றும் டி.டி.வி. தினகரனும் பணம் விநியோகம் செய்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அமைச்சர் விஜய பாகரின் இல்லம் மற்றும் அவரது தொழில் நிறுவனங்களில் மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் சுமார் 90 கோடி ரூபாய் இந்தத் தேர்தலுக்கு விநியோகிக்கப்பட்ட ஆவணங் கள் சிக்கியதாக அறிவிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஏப்ரல் 10 ஆம் தேதி கூடி மிக நீண்ட ஆலோசனையை நடத்தியது. நண்பகல் தொடங்கி இரவு வரை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்துச் செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த அறிவிப்பிற்குப் பிறகு உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக அதாவது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, வேட்பாளர் தின கரன், அமைச்சர் களான தங்க மணி, செங்கோட்டையன், விஜய பாஸ்கர், வேலு மணி உள்ளிட்ட பலர் இதில் சம்பந்தப் பட்டிருக் கிறார்கள். ஆகவே முதலமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள் ளிட்ட பத்துப்பேர் மீது வழக்குப் பதிவு செய்ய அப்போது மத்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டதுடன், அவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கவும் தமிழக தலைமைத் தேர்தல் அதி காரியான ராஜேஷ் லக்கானிக்கு கடிதத்தையும் டெல்லி தேர்தல் ஆணையம் அனுப்பியது. ஆனால் இதுவரை அந்தக் கடிதத்தின் அடிப் படையில் எந்த ஒரு வழக் கையும் தமிழகத் தேர்தல் ஆணையம் பதிவு செய்ய வில்லை. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக் கண்ணு என்பவர் தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் அடிப் படையில் கேட்டபோது அவருக் குக் கிடைத்த அந்தத் தகவல்கள் மூலம் தான் இப்படி யொரு நடவடிக்கையை எடுக்க மத்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியை கேட்டிருக்கும் விபரமே தெரிய வந்திருக்கிறது. புதுடெல்லி மத்திய தேர்தல் ஆணை யம் ஏப்ரல் மாதம் இந்த வழக்குகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டும் தற்போது மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமிழக தலைமை அதிகாரி இது போன்று ஒரு வழக்குப் பதிவு செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கையும் தொடர்ந் திருக்கிறார். இந்த அவசர வழக்கு இன்று (திங்கள்) விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த அதிர்ச்சி விபரங்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. ஆகவே தற்போது முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச் சர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு தமிழக தேர்தல் ஆணையம் ஏதாவது பதில் அளித்துள் ளதா என்பது பற்றி தெரிவிக்கப்பட வில்லை. ஒருவேளை தமிழகத் தேர்தல் ஆணையம் மேற்குறிப்பிட் டுள்ள அமைச்சர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா என்பதும் தெரியவில்லை. முதல மைச்சர், அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறை பயந்து அதனைக் கிடப்பில் போட்டு விட்டார்களா என்ற விபரமும் வெளிவர வில்லை. தற்போது நீதிமன்றத்திற்கு வழக்கு வந்திருக்கிறது. நீதிமன்ற விசாரணை யில் இதுகுறித்த பதில் கிடைக்கும் என எதிர்ப்பார்க் கப்படுகிறது. இதுவரை மறைக்கப்பட்ட விபரம், தகவல் உரிமைச் சட்டத் தின் மூலம் தற்போது வெளி வந்திருக்கிறது. இதன் பிறகாவது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து வெளிப்படையாக அறிவிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது!