பாலாற்றில் ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணையை பார்வையிட்ட தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி

வேலூர், ஜூன் 19- பாலாற்றின் குறுக்கே கங்குந் தியில் ஆந்திர அரசு தரை மட்டப் பாலம் கட்டுவதாக தெரிவித்தா லும், வருங்காலத்தில் தடுப்பணை யாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்க ளுக்கு ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க. அரசு, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை தக்க வைப் பதில் மட்டும் கவனம் செலுத்தா மல், அண்டை மாநிலங்களுடன் பேசி, நதிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மேற்கு மாவட்டக் கழகம் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையான குப்பம் செல்லும் சாலையில் உள்ள கங்குந்தி கிராமம் பாலாற்றில் ஆந்திர அரசு புதியதாக தடுப் பணையைக் கட்டி வருகிறது. இதனால் இதை சுற்றியுள்ள விவசாய மக்களும் தொழிலாளர் களும் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆந்திர அரசின் இச்செயலை தடுக்கும் முயற்சியாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கங்குந்தி பாலாற்றில் புதிய தாகக் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை நேரில் சென்று பார்வையிட்டார். அதுபோது கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உடனி ருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆர். காந்தி எம்.எல்.ஏ. (கிழக்கு), ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. (மத்திய), ம.முத்தமிழ் செல்வி (மேற்கு மாவட் டக் கழகப் பொறுப்பாளர்), வேலூர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., திருப் பத்தூர் அ.நல்ல தம்பி எம்.எல்.ஏ., ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலா ளர் மாதவரம் எஸ்.சுதர் சனம் எம்.எல்.ஏ., ஆயிரம் விளக்கு கு.க. செல்வம் எம்.எல்.ஏ. வேலூர் மத்திய மாவட்டக் கழக அவைத்தலைவர் தி.அ. முகமது சகி, முன்னாள் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.தேவராஜ், மேற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் பி.எம். முனிவேல், மேற்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் ஜோதிராஜன், அ. சம்பத்குமார், ஷர்மிளா ஜெய பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் அண்ணா அருணகிரி உள்பட மாவட்டத்தின் நகர, ஒன்றிய, பேரூர்க் கழகச் செயலாளர்கள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தடுப்பணையை பார்வையிட்ட பின் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- குப்பம் - கங்குந்தி இடையில் பாலாறு பாயும் 1 கிலோ மீட்டரில் உள்ள தரைப் பாலத்தை மாற்றி, ரூ.4.5 கோடி செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங் களுக்கு பாலாறு மற்றும் கொசஸ் தலை ஆகிய ஆறுகள் மூலம் வர வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள் ளன. இதனால் ஏராளமான விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங் களோடு, நதி நீர் பிரச் சினையைப் பொறுத்தவரையில் உரிய நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, தீர்க்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு அதற்கான முயற் சிகளில் ஈடுபட வில்லை என்பது வேதனைக்குரி யது. குதிரை பேரம் நடத்தி ஆட் சியை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு நிலையற்ற, செயலற்ற ஆட்சி தமிழகத்தில் இருப்ப தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நதிநீர் பாதுகாப்பு கமிட்டியை அரசு அமைத்திட வேண்டும்! இந்த நேரத்தில், நதி நீர் பிரச் சினைகளை கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட நதி நீர் பாதுகாப்பு கமிட்டி ஒன்றை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்தப் பணியை உடனடி யாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்க வேண்டும், என்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயிகளுக்கு உள்ளது! தற்போது கங்குந்தியில் தரை மட்டப் பாலம் என்று தெரிவித்தாலும், வருங் காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவ சாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட் டுள்ளது. எனவே, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசு அதற்கான முயற்சி களில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநி லங்களைப் பொறுத்தவரையில் நல்லது - கெட்டது எதுவானாலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி ஒருமனதாக முடிவெடுத்து, அதனை செயல்படுத்து கிறார்கள். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்த வரையில் கடந்த ஆறாண்டு களில் இதுவரை ஒருமுறை கூட அனைத் துக் கட்சிக் கூட்டத்தினை கூட்ட வில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட கூட்டாமல் செயலற்ற ஆட்சியாக உள்ளது! தி.மு.க. ஆட்சியின் போது தலைவர் கலைஞர் அவர்கள் இது போன்ற சூழ் நிலைகளில் அனைத் துக் கட்சி கூட்டங்களை கூட்டி, கருத்துகளைக் கேட்டு முடிவெடுத் தது மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு அவரே நேரில் சென்று அந்த மாநில முதல்வர் களுடன் நேரடி யாகப் பேசுவது, சம்பந்தப்பட்ட அமைச் சர்களை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பார். ஆனால், இன்றைக்கு உள்ள ஆட்சி அப்படிப்பட்ட பணிகளில் ஈடு படாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. கொள்ளையடிப் பது, லஞ்சம் வாங்குவது, கமிஷன் வாங்குவது, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள குதிரை பேரம் நடத்துவது போன்ற பணிகள்தான் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வருகிறது. இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.