காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

காஞ்சிபுரம், ஜூன் 19- சட்டமன்ற வைர விழா நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் 94-வது பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட் டத்தில் ஜூலை 1 அன்று குன்றத் தூர் ஒன்றியம், படப்பை அருகே கரசங் காலில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரையாற்றுகி றார். இம்மாபெரும் பொதுக் கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழு வதிலும் இருந்து கழகத் தினர் ஆயிரக்கணக்கில் அணி திரண்டு பங்கேற் கின்றனர். என மாவட்டச் செயலாளர் தா.மோ.அன் பரசன் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக அவசர செயற்குழு உறுப்பினர் கள் கூட்டம் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில்மாவட்டக் கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமை யில் நடைபெற்றது. தொடக்கத்தில் மாவட் டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்டக் கழக துணைச்செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி. அன்புச்செழியன், கலை வாணி காமராஜ் மற்றும் மாவட்டப் பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைத்தி யலிங்கம், கழக சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீ.தமிழ்மணி, ஒன்றிய - நகரச் செயலாளர்கள் எம்.கே.தண்டபாணி, ஜெ.சண்முகம், படப்பை ஆ.மனோகரன், வே. கருணாநிதி, எஸ்.நரேந் திரன், இரா.நரேஷ் கண்ணா, ஏ.ஆர்.டி.லோக நாதன், ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, எஸ்.ஆர்.எல். இதயவர் மன், பையனூர் எம். சேகர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கள் க.அன்புச்செல்வன், பெ.தேவதாஸ்,எம்.பி.மூர்த்தி, மு.ரஞ்சன், பேரூர் செயலாளர்கள் த.ஜெயக் குமார், பட்டூர் எஸ்.ஜப ருல்லா, மு.தேவராஜ், ஆ.நடராஜன், இ.மனோ கரன், ஜி.டி.யுவராஜ், ஆர்.சதீஷ் குமார், மாவட்ட இளை ஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர்கள் செந்தில் தேவ ராஜ், வீ.விஜயகுமார், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல். பிரபு, படப்பை ராஜேந் திரன், பா.ஞான பிர காசம், மேடவாக்கம் த.ஏழுமலை, சி.என். செல்வமூர்த்தி, க.துரை, தி.க.பாஸ்கரன், எஸ்.சதீஷ் வழக்கறிஞர் ராமானுஜம், பீர்க்கன்கரணை சங்கர், குன்றத்தூர் பேரூர் கழக நிர்வாகிகள் க.ஏகாம் பரம், ஆர்.கே.அபிபுன் னிசா, திருநாவுக்கரசு, கந்தசாமி, அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் உரை யாற்றினார். தமிழர்களின் தன்னி கரில்லாத் தலைவர் - திராவிட இனச் சின்ன மாகத்திகழும் நம்முடைய ஒப்பாரும் - மிக்காரும் இலா நம் நெஞ்சம் நிறைந்த அன்புத் தலை வர் கலைஞர் அவர்களின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழாவை முன் னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றத்தூர் ஒன்றியம், படப்பை கரசங்கால், அண்ணா திடலில் வருகிற 1.7.2017 சனிக் கிழமை அன்று மாலை 5 மணி நடை பெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் முடியட்டும் அராஜக அ.தி.மு.க. ஆட்சி,விடியட்டும் தி.மு.க நல்லாட்சி என்ற உன்னத லட்சிய நோக்கத் துடன் அரும்பாடு பட்டு வரும் நமக்கு நாமே நாயகர்நம்மை எல்லாம் வழிநடத்திச் செல்லும் கழக செயல் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்ற உள் ளார். படப்பை கரசங் காலில் நடைபெறும் இப் பொதுக்கூட்டம் மாநாடு போன்று பிரம்மாண்ட மான மேடை அமைத்து மிகவும் எழுச்சியாக - கோலாகலமாகதிருவிழாக் கோலம் பூணும் வகையில் மாபெரும் மாநாடு போல நடத்திடுவது என்றும், காஞ்சி வடக்கு மாவட் டத்தில் இருந்து ஆயிரக் கணக்கான கழகத்தினரை யும், இளைஞர் அணி - மாணவர் அணி - மகளிர் அணி உள்ளிட்ட கழக அணிகளை சேர்ந்தவர் களையும் மற்றும் பொது மக்களையும் இம் மாபெரும் பொதுக்கூட் டத்தில் பங்கேற்கச் செய்ய, கழகத்தினர் அனைவரும் ஒருங் கிணைந்து பாடுபடுவது என்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகம் ஏகமனதாக முடிவெடுக் கிறது. வருகிற 9.7.2017 மற் றும் 23.7.2017 ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ள வாக் காளர்கள் சரிபார்ப்பு சிறப்பு முகாமினை கழகத் தினர் சிறப்பான முறை யில் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் 18 - 21 வயது நிரம்பிய இளம் வாக் காளர்களை சேர்த் திடவும், இறந்த - இடம் மாறிய வாக்காளர்களை நீக்கிடவும் உரிய படிவங் களில் பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலு வலர்களிடம் கொண்டு போய் சேர்த்திடும் இன்றி யமையா மிக முக்கிய பணியில் வார்டு, வட்டக் கழக செயலாளர் கள் கழ கத்தினருடன் இனைந்து சுறுசுறுப்பாக பணி யாற்றிடுவது என்றும், இப்பணிகளை ஒன்றிய - நகர - பேரூர் கழகச் செயலாளர்கள் முடுக்கி விட வேண்டும் என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகம் ஒரு மனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் கூறி னார்.