ரபேல் விமான ஒப்பந்தம்! அமைச்சரவைக்கே தெரியா

புதுடெல்லி, செப்.14- ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுத் துள்ளார்; அவர் அமைச்சரவை யைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று பா.ஜ.க.-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, 126 ரபேல் ரக போர் விமானங்களைக் கொள் முதல் செய்வதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் மேற் கொண்டிருந்தது. பின்னர் வந்த மோடி அரசு, 36 விமானங்களை மட்டும் வாங்குவதற்கு முடிவு செய்தது. மேலும், அந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலை யன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தையும் திடீரென இணைத்தது. முன்பு ஒரு விமானம் 526 கோடி ரூபாய் என்று விலை நிர்ண யிக்கப்பட்டிருந்தது. மோடி அரசோ அதனை 1670 கோடி ரூபாயாக உயர்த்தியும் அதிர்ச்சியளித்தது. இந்நிலையில்தான், ரபேல் ரக போர் விமான கொள்முதல் ஒப்பந்த மானது, அமைச்சரவைக்கே தெரியாமல் பிரதமர் மோடி தன்னிச் சையாக எடுத்த முடிவு என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களும், மத்திய முன்னாள் அமைச்சர்களுமான யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர் .செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசியிருக்கும் அவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு 126 விமானங்கள் தேவை என்று பாதுகாப்புத் தளவா டங்கள் கொள்முதல் கவுன்சில் தெரி வித்திருந்தது; ஆனால், மோடி அரசு 30 விமானங்களை வாங்கு வதற்கு மட்டுமே ஒப்பந்தம் போட் டுள்ளது என்று தெரிவித்துள் ளனர். ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கென பல விதிமுறை கள் உள்ள நிலையில், அவை அனைத்தையும் பிரதமர் மோடி மீறி இருக்கிறார் என்று கூறியிருக் கும் முன்னாள் அமைச்சர்கள், ஒரு ரபேல் ரகபோர் விமானத்தின் விலை ரூ. 526 கோடி என்ற நிலை யில், அதனை ரூ. 1670 கோடியாக மாற்றும் தன்னிச்சையான முடி வையும் மோடியே எடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஆதரவு தொழிலதிபர்களுக்காக ஒப்பந்தத் தையே மோடி மாற்றியுள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.