முப்பெரும் விழாவிற்கு வருகை தரும்

விழுப்புரம், செப்.14- விழுப்புரம் முப்பெ ரும் விழா குறித்து மாவட்டக் கழகச் செய லாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- நாளை (செப்டம்பர் 15 சனிக்கிழமை) விழுப் புரத்தில் கழகத்தின் சார் பில் முப்பெரும் விழா, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைக் கிறார். நம் தலைவர் மு.க. ஸ்டாலின் பொறுப் பேற்றதும் நடைபெறும் முதல் கழக விழா. கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண் டிய குடும்ப விழா! பேரறி ஞர் அண்ணா, முத்தமிழ றிஞர் கலைஞர் எடுத்து சொன்னது போல நாம் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டிய விழா, இந்த விழாவிற்கு கழகத் தோழர்கள் திரளாக பங் கேற்க வேண்டும். விழுப் புரம் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலு வலகம், நீதிமன்ற வளா கம், புதிய பேருந்து நிலை யம், , மருத்துவக்கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், அரசுக் கலைக்கல்லூரி என இந்த மாவட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட முத்தமிழறிஞர் கலை ஞரின் அரசியல் வாரிசு தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் முப்பெரும் விழா. இந்த விழாவிற்கு அனைவரும் வருக வருக! இந்த விழாவில் பெரி யார் விருது -மும்பை வி.தேவதாசன், அண்ணா விருது-பொன்.ராம கிருஷ்ணன், கலைஞர் விருது - குத்தாலம் பி.கல் யாணம், பாவேந்தர் விருது- புலவர் இந்திர குமாரி, பேராசிரியர் விருது - கவிக்கொண் டால் மா.செங்குட்டுவன் ஆகியோருக்கு கழகத் தின் சார்பில் வழங்கப் பட உள்ளது. முரசொலி அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் பாவேந் தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 நபர் களுக்கும் மற்றும் இந்த ஆண்டு சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களாக தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக் கப்பட்ட 10 நபர்களுக்கு பணமுடிப்பு-பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சி யில் குடும்பம் , குடும்ப மாக எதிர்கால தமிழ கத்தை மீட்டெடுக்கும் மு.க.ஸ்டாலின் தலை மையில் பங்கேற்போம். அதே நேரத்தில் விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழாவிற்கு பங்கேற்க வருகைதரும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு செப்டம்பர்-15 பகல் 10.00 மணியளவில் விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி அருகில் இருந்து கொடுக் கப்பட உள்ளது. அதிலும் கழகத்தோழர்கள் பங்கேற்று சிறப்பு சேர்க்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.