இந்தியாவை விட்டு வெளியேறும்

லண்டன், செப்.14- இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந் தித்து, வங்கிகளுடனான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்ப தாக தெரிவித்தேன் என்று தொழில திபர் விஜய் மல்லையா கூறி யுள்ளார். இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா (62), பிரிட் டனுக்கு தப்பிவிட்டார். கடந்த 2016, மார்ச்சில் இந்தியாவைவிட்டு வெளியேறிய அவரை, நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக் கைகளை லண்டன் நீதி மன்றம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கின் விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன் றத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அதில் ஆஜராவதற்காக வந்த விஜய் மல்லையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந் தித்தேன். வங்கிகளுட னான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக அவரிடம் பலமுறை தெரிவித்தேன். இதுதான் உண்மை. வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத் துவதற்கான விரிவான திட்டத்தை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளேன். அனைத்து கடன்களை யும் அடைப்பேன். என்னி டம் இருந்து கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்பதே எனக்கு எதிரான வழக் கின் முக்கிய நோக்கம். நான் கடன் தொகையை திருப்பி அளிக்க முயற் சிப்பதை வங்கிகள் ஏன் ஊக்குவிக்க மறுக்கின் றன? இந்த கேள்வியை வங்கிகளிடம் ஊடகங் கள் எழுப்பவேண்டும். அரசியல் கட்சிகளால் நான் பலிகடா ஆக்கப் பட்டுள்ளேன். என்னை நாடு கடத் தக் கோரும் வழக்கில் நீதி மன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு சாதகமான உத்தரவு வரும் என நம்புகிறேன் என்றார் மல்லையா.