விஜய்மல்லையா - ஜேட்லி சந்திப்பு!

புதுடெல்லி, செப்.14- இந்தியாவைவிட்டு வெளியேறும் முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந் தித்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரி வித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சுதந் திரமான விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்ட பதி வில், மல்லையா தெரி வித்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இதுதொடர்பாக சுதந்திர மான விசாரணைக்கு பிர தமர் மோடி உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளி யிட்ட பதிவில், அருண் ஜேட்லியிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு மல்லையா நாட்டைவிட்டு வெளி யேறியுள்ளார் என்று கிண்டலாக குறிப்பிட் டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரம் மிகவும் அதிர்ச்சியளிப் பதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நீரவ் மோடி, நாட்டை விட்டு தப்பும் முன்பு பிரதமர் மோடியைச் சந் தித்திருக்கிறார். மல் லையா நாட்டைவிட்டு தப்பும் முன் நிதியமைச் சர் ஜேட்லியைச் சந்தித் திருக்கிறார். இந்த சந்திப்புகளில் என்ன விவாதிக்கப்பட்டது? அதனை அறிய மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி வெளி யிட்ட பதிவில், பெரும் தொழிலதிபர்கள், நமது நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை யடித்துவிட்டு, வெளி நாடு தப்புவதற்கு மோடி அரசு உதவியிருப்பது மீண்டும் உறுதியாகி யுள்ளது என்று கூறி யுள்ளார். தேஜஸ்வியாதவ் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஊழல்வாதி களுடனும், தலைமறைவு குற்றவாளிகளுடனும் தேசிய ஜனநாயக கூட் டணி அரசு கூட்டு வைத் துக்கொண்டு மக்களின் பணத்தை கொள்ளை யடித்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.