கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம், செப். 14- தலைவர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த் திட கழகத்தினர் குடும்பத் துடன் திரண்டு வாரீர் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அன்பான அழைப்பை ஏற்று விழுப் புரத்தில் நாளை 15-ஆம் தேதி நடைபெறும் முப் பெரும் விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள கழகத்தினர் அனைவரும் திரண்டு வாரீர் என மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ., வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை வருமாறு :- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - கழகம் தோன்றிய திருநாள் விழா ஆகிய மூன்று விழாக்களையும் இணைந்து நம்முடைய உயிரினும் மேலான அன்பு தலைவர் கலைஞர் அவர்கள் முப்பெரும் விழாவாக ஆண்டு தோறும் சென்னை மற் றும் மாவட்ட தலை நகரங்களில் திராவிட இயக்கத்தின் லட்சியங் களை நினைவூட்டும் திருவிழாவாக கொண் டாடி மகிழ்ந்தார். தலைவர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு நம்முடைய கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நம் உயிரனைய தலைவர் தளபதி அவர்கள் விழுப் புரத்தில் முப்பெரும் விழாவை முனைப்புடன் நடத்திட உள்ளார். கழகத்தின் தலைவர் பொறுப்பை நம்முடைய ஆருயிர் தலைவர் தளபதி அவர்கள் ஏற்ற பிறகு நடைபெறும் முதல் முப்பெரும் விழாவிற்கு கழகத்தினர் அனை வரையும் ஒரு சேர சந்திக்கப் போகிறேன்; ஊக்கத்துடனும் - உற்சா கத்துடனும் விழுப்புரத் திற்கு விரைந்து வரு வார்கள் என்று விழி வைத்து எதிர்பார்க்கி றேன் என்று கழக உடன்பிறப்புகளுக்கு அன்பான அழைப்பை விடுத்துள்ளார் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கழகம் காத்திடவும்; தலைவர் கலைஞர் அவர் களின் புகழுக்கு மேலும் பெருமை செய்திடவும், குடும்பம் குடும்பமாக விழுப்புரத்தில் கூடிடு வோம்! வெற்றி புரி நோக்கி வீறு நடை போட்டு விரைந்திடு வோம் என்று நம் நெஞ்சம் நிறைந்த அன்பு தலைவர் அவர்கள் உள் ளன்போடு அழைத்த அன்பான அழைப்பினை ஏற்று, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - ஊராட்சி - வார்டு கழகச் செயலா ளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக அணிகளின் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - ஊராட்சி - வார்டு கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப் பாளர்கள், கழக முன் னோடிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் உள் ளிட்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த கழகத்தினரும் கார் - வேன் - பேருந்து உள் ளிட்ட வாகனங்களில் நாளை 15-ஆம் தேதி மாலை விழுப்புரத்திற்கு ஆயிரக்கணக்கில் அணி திரண்டு பங்கேற்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்போம். ``இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று நமக்கெல்லாம் சொல்லித்தந்த பெருந் தகை அண்ணா பிறந்த மாவட்டத்திலிருந்து கழகத்தினர் அனைவரும் இம்மாபெரும் விழாவில் கலந்து கொள்வது நமது உரிமை, நமது கடமை என்ற அந்த உணர்வோடு நாளை 15-ஆம் தேதி பகல் 1 மணிக்கெல்லாம் புறப் பட்டு விழுப்புரத்தில் அணி திரள்வோம் வாரீர்! வாரீர் ! என்று அன்புடன் அழைக் கிறேன். மேலும் விழுப்புரம் முப்பெரும் விழாவுக்கு செல்லும் நம்முடைய ஒப்பாரும் மிக்காரும் இல்லா வீரமிகு தலைவர் தளபதி அவர்களை வரவேற்று நம்முடைய காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையான திரிசூலம் ரயில் நிலை யத்தில் இருந்து செங்கல் பட்டு பாலாற்றுப் பாலம் முடியும் இடம் வரை ஜி.எஸ்.டி சாலை வழி நெடுகிலும் சாலையின் இருமருங்கிலும் கழக கொடி தோரணங்களை அழகுற கட்டியும் - ஆங்காங்கு முக்கிய இடங்களில் குறிப்பிட்ட அளவிற்கு வரவேற்பு பதாகைகளை அமைத் தும் எழுச்சியான முறை யில் வரவேற்பு ஏற்பாடு களை செய்திட வேண் டுமெனகேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., அறிக்கையில் கூறியுள் ளார்.