விழுப்புரத்தில் நடைபெறும் கழக

திருவள்ளூர், செப். 14- திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயற் குழு கூட்டம் 19.09.2018, செவ்வாய்க் கிழமை , மாலை - 04:00 மணிய ளவில், கவரைப் பேட்டை ஜனப்பன் சத்தி ரம் கூட்டுச் சாலை ஹோட் டல் ஆர்.எஸ். பவனில் மாவட்ட அவைத் தலைவர் மு.பக லவன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயாலாளர் கும் முடிப்பூண்டி கி.வேணு தீர்மானங்களை விளக்கி சிறப்புரை யாற்றினார் . இக்கூட்டத்தில் மாநில ஆதிதிராவிட நலக்குழுச் செயலாளர் க.சுந்தரம் , மாநில ஆதி திராவிட நலக்குழு இணைச் செயலாளர் அ.கிருஷ்ணசாமி , மாநில தீர்மான குழு உறுப்பினர் சி.எச்.சேகர் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி , மாவட்ட துணைச் செயலாளர்கள் திருத்தணி மு.கதிரவன் , டாக்டர் பரிமளம் விஸ் வநாதன் , ஆகியோர் முன் னிலை வகித்தனர் கூட்டத்தில் ஒன்றிய செய லாளர்கள் மு.மணி பாலன் , டி.கே.சந்திர சேகர் , ஆ.சத்தியவேலு , எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் , பேரூர் கழக செயலா ளர்கள் இரா.அறிவழகன், டாக்டர்.ஏ.விஸ்வநாதன் , நா.மோகன்ராஜ், பொதுக் குழு உறுப்பி னர்கள்: மீஞ்சூர் கே.சுப்பி ரமணி , பா.செ.குண சேகர், மாவட்ட அணி களின் அமைப்பாளர்கள் தே. உதயசூரியன் , அ.முகமது அலவி , கோடு வள்ளி முரளி , எம்.ராதா கிருஷ்ணன் , எம்.எஸ். முத்துக்குமார் , கி.வே. ஆனந்தகுமார் , டி.கே. முனிவேல் , டி.ஜானகி ராமன் , வே.அன்பு வாணன் மற்றும் துணை அமைப்பாளர்கள், இந்நாள் மற்றும் முன் னாள் உள் ளாட்சி மன்றப் பிரதிநிதி கள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர் . கூட்டத்திற்கு வந்த அனைவரையும் சோழ வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வ சேகரன் வரவேற்றார். நிறைவாக மாவட்ட வழக் கறிஞர் அணி அமைப் பாளர் அ.தேவேந்திரன் நன்றி கூறினார். கூட் டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பொதுக்குழுவில் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கும் எதிர் வரும் எல்லா தேர்தல்களிலும் வாகை சூடி தமிழகத்தின் முதல் வராக வருவதற்கும் திரு வள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள் கிறது. கழகத்தின் பொருளா ளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் அவர்க ளுக்கும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறது. முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் காவேரி மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அவருடைய உடல்நிலை பற்றி வந்த செய்திகளை அறிந்தும் தலைவர் கலைஞர் அவர் கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அண்ணனின் மடியில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார் என்னும் துயரத்தில் தற் கொலை செய்துகொண் டும் , அதிர்ச்சியிலும் தங்களின் உயிரையும் விட்ட திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தினை சார்ந்த பொதட்டூர் பேட்டை கெங்கன் , எல்லாபுரம் தெற்கு ஒன்றியம் திருநிலை ராஜி (எ) ராஜேஷ் , பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி துரைராஜ் , பள்ளிப்பட்டு எஸ்.எண் கண்டிகை கோவிந்தப்ப நாயுடு , பள்ளிப்பட்டு பேரூர் கங்காதரம் , ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றியம் தேவாலம்பா புரம் நிம்மாளி , பொன்னேரி பேரூர் மீசை (எ) பாலன் ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் , இவர்களின் குடும் பத்திற்கு தலைமைக் கழகத்தின் சார்பில் இரண்டு இலட்ச ரூபாய் நிதியினை வழங்கிய கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருவள் ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க தனது நன்றியினை யும் தெரிவித்து கொள்கிறது . பேரறிஞர் பெருந் தகை அண்ணா , அய்யா தந்தை பெரியார் , கழகம் தோன்றிய நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் நடை பெறும் கழகத்தின் முப் பெரும் விழா இந்த ஆண்டு வருகின்ற 15 ஆம் தேதி விழுப்புரம் மாவட் டத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்க ளின் தலை மையில் நடைபெற வுள்ளது. இதில் நமது திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திரளாக கலந்து கொள் வது என மாவட்ட தி.மு.க ஏகமனதாக தீர்மானிக் கிறது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் களின் ஆணைப்படி வருகின்ற 18.09.2018 அன்று மாவட்ட கழக செயலாளர் தலை மையில் பொன்னேரியில் நடைபெறும் ஊழல் அ.தி.மு. அரசுக்கு எதிராக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டதில் திருவள் ளூர் வடக்கு மாவட் டத்தில் உள்ள ஒன்றிய , நகர , பேரூர் , ஊராட்சி , வார்டு , வட்ட கழகங் களில் இருந்து திரளாக கலந்து கொண்டு கண் டன ஆர்பாட் டத்தினை வெற்றி பெற செய்யுமாறு மாவட்ட தி.மு.க கேட்டுக்கொள் கிறது . செப்டம்பர் திங்கள் 1 ஆம் நாள் தொடங்கி அக்டோபர் திங்கள் 31 நாள் வரை 61 நாட்கள் வாக்காளர் பட்டயலில் பெயர்க்களை சேர்க் கவும், இறந்த - இடம் மாறிய வாக்கா ளர்களை இனம் கண்டு நீக்கிடவும் 4 நாட்கள் கிராம சபை கூட்டங்களும் , அதனை தொடர்ந்து சிறப்பு முகாம்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதில் நமது வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (க்ஷடுஹ-2) விழிப்புடன் செயல்பட்டு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியபடி வாக்காளர் பட்டிய லினை செம்மைப்படுத் தும் பணியில் தங்களை முழுமையாக ஈடு படுத்திக் கொள்ளு மாறும் , வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு மாவட்ட வழக்கரிஞர் அணியினர் தேவையான ஆலோ சனைகளை வழங்கி உதவிடுமாறும் மாவட்ட கழகம் கேட்டுக் கொள்கி றது . தென்னாட்டு பெர்னாட்ஷா , இந் நாட்டு இங்கர்சால் என மாற்று கருத்து உள் ளோராலும் போற்றிப் பாராட்டப்பட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை வருகின்ற செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாளன்று ஒன்றிய , நகர , பேரூர் ஊராட்சி , வார்டு , வட்ட கழகங்கள் தோறும் கழகத்தின் இரு வண்ணக் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செய்திடுவது எனவும் , அதே போல் செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் பகுத்தறிவு பகலவன் அய்யா தந்தை பெரி யாரின் பிறந்தநாள் விழா வினையும் எழுச்சியு டனும் சிறப்புடனும் நடத்திடுவது எனவும் மாவட்ட தி.மு.க தீர்மானிக் கிறது . கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுக்குழுவில் ஏகமனதாக தேர்வு செய் யப்பட்ட போது முதலில் வாழ்த்துரை வழங்கிட திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வாய்ப் பினை வழங்கிய தலைமை கழகத்திற்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திருவள் ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க தனது நெஞ் சார்ந்த நன்றிகளை தெரி வித்துக் கொள் கிறது. இவ்வாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்ட தாக மாவட்டச் செய லாளர் கும்முடிப்பூண்டி கி.வேணு தெரிவித் துள்ளார்.