பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்பாகக

காஞ்சிபுரம், செப்.14- பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி நாளை (15.9.2018) காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடு வீர் என்றும், விழுப் புரத்தில் நடை பெறுகிற முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் களின் வேண்டுகோளின் படி முப்பெரும் விழாவில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகத்தினர் பெரு மளவில் பங்கேற்பீர் என்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செய லாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து க.சுந்தர் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சிகளில் நாளை (15.09.2018 சனிக்கிழமை) அறிவுலக மேதை, திராவிட இயக் கம் கண்ட மாமேதை அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன் னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தும் நிகழ்ச்சிகளில் மாவட் டம் முழுவதும் உள்ள கழக ஒன்றிய, நகர, பேரூர், சிற்றூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திட வேண்டும். பேரறிஞர் பிறந்த நாள். தமிழன் தலை நிமிர்ந்திட திராவிட முன் னேற்றக் கழகம் துவக்கப்பட்ட நாள், சுயமரி யாதை யோடு வாழ மூட நம்பிக்கையை விரட்டி அடித்து தன் இறுதி மூச்சு வரை போராடிய வெண் தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா ஆகிய வற்றை முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகி றோம். அதுபோல 15.09.2018 அன்று மாலை 4.00 மணி யளவில் விழுப்புரம் நக ராட்சி மைதானம் அண்ணா திடலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்ற உள் ளார். இவ்விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர் வாகிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதி நிதிகள், கழகச் செயல் வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப் பிக்க வேண்டுமாய் கேட் டுக் கொள்கிறேன். இவ்வாறு க.சுந்தர் எம்.எல்.ஏ. அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.