பல்கலைக்கழகம் ஒப்புதல்!

பாண்டிச்சேரி, அக். 11 - முத்தமிழறிஞர் கலைஞரின் புகழுக்குப் பெருமை சேர்த்திடும் வகையில், அவருக்குச் சிறப்பு இருக்கை அமைத்திட, புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து புதுவை முதல மைச்சர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா வின் முதுபெரும் அரசியல் தலை வரும், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான முத்தமிழறிஞர் கலைஞரை சிறப்பிக்கும் வகையில், புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க, முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்ததாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. அவருடைய கோரிக்கையை ஏற்று, ``டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி இருக்கை என்ற பெயரில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க பல்கலைக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.