கழகத் தலைவ மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை, அக். 11- ``முக்கியத் திட்டங்களை செயல் படுத்தும்போது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம் என தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மத்திய அரசி டம் வலியுறுத்தியிருப்பது ஆணவத் தின் உச்சக்கட்டம் என்றும் ``கடும் கண்டனத்துக்குரியது என்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு :- தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் திட்டங் களை நிறை வேற்றும் முன்பு பொதுமக் களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு, மத்திய பா.ஜ.க. அரசிடம் முதலமைச் சர் எடப்பாடி பழனி சாமி தலைமையி லான அ.தி.மு.க அரசு கோரிக்கை விடுத் திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன். சுயநலத்துடன் கோரிக்கையா? குறிப்பாக ஸ்டெர் லைட் தனியார் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள பேனா மை ஈரம் காய்வதற்குள், அ.தி.மு.க அரசு விடுத்துள்ள இந்த திடீர் கோரிக்கை உள்நோக்கத்துடன் கூடிய சுயநலம் கொண்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப் பண்ணன் இதற்காகவே டெல்லி சென்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி யிருப்பது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே உதவியது போல், அந்தக் குழு மத்தின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட் டத்திற்கும் உதவு வதற்கான அ.தி.மு.க அரசின் முன்னோட்ட மாக அமைந்துள்ளது. மக்களின் நலனுக் காகப் போராடும் அர சியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா அமைப்பு களால் திட்டங்களை நிறை வேற்றுவது தாம தமாகிறது என்று அந்தக் கோரிக்கை மனுவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால் அரசியல் கட்சிகளோ, அரசு சாரா அமைப்புகளோ எந்தக் காலத் திலும் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சய மாக எதிரானவை அல்ல. அதனால்தான் மக்களின் விருப்பத்துடன் கூடிய ஒப்புத லுடன் - மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நல்லெண்ண அடிப் படையில் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. கையாலாகாத தனத்தை மறைக்க இப்படியொரு பழியா? ஆனால், இதைக்கூட சரியான கோணத் தில் புரிந்துகொள்ளாத அ.தி.மு.க அரசு, தனது கையாலாகாத தனத்தை மறைப் பதற்காக, வேண்டுமென்றே அரசியல் கட்சிகள் மீது பழிபோட்டு, இப்படியொரு கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற் சாலைகளோ, புதிய திட்டங்களோ, முதலீடு களோ - தலைவிரித்தாடும் அ.தி.மு.க அரசின் ஊழல் மற்றும் கமிஷன் கலாச் சாரத்தால், வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனவே தவிர, மக்கள் நலனுக் காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ஓயாமல் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளால் அல்ல! ஆனால், தங்கள் முதுகில் படிந்திருக் கும் ஊழல் அழுக்கை கிஞ்சிற்றும் நீக்க முடியாத அ.தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும் மக்களுக்கு எதிரான திட்டங்களை, கருத்துக் கேட்காமலேயே செயல்படுத்துவோம் என்ற எதேச்சதி கார மனப்பான்மையில் செயல்படுவது, ஆணவத்தின் உச்சகட்டம். ஆகவே, மத்திய அரசுக்கு விடுத் துள்ள கோரிக்கையை அ.தி.மு.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஜனநாயக ரீதியாக மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்த கண்டிப் பாக முன் வரவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.