காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்!

டோல்பூர், அக்.11 - செல்போன் மற்றும் டி சர்ட்டு களை கூட சீனாவிடம் இருந்து வாங்குவதன் மூலம் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்து விட்டது என ராகுல்காந்தி தெரி வித்துள்ளார். ராஜஸ்தான் மாநி லத்தின் டோல்பூர் மாவட்டத்தில் உள்ள மனியாவில் இருந்து 150 கி.மீ. தூர பிரசார பேரணி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. ராகுல்காந்தி இதில் கலந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி கூறிய தாவது: - ராஜஸ்தானில் டிசம்பரில் தேர் தல் நடைபெற உள்ளது. 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நாட்டின் பாதுகாவலர் ஆகவிரும் புவதாக மோடி கூறினார். ஆனால் யாருக்கு அவர் பாதுகாவலர் ஆனார் என்பதை அவர் தெளிவு படுத்தவில்லை. இளை ஞர்கள் மோடியை நம்பினார்கள். நான் பிரதமராக விரும்ப வில்லை; பாதுகாவலனாக இருக் கவே விரும்புகிறேன் என்றார் மோடி. தற்போது மக்கள் சிரிக்கி றார்கள். அனில் அம்பானி பாது காக்கப்பட்டுள்ளது பின்னர்தான் அவர்களுக்கு தெரிய வந்தது. பிரதமர் மோடியின் பொருளா தாரம் மற்றும் விவசாய கொள்கை களால் விவசாயிகளின் ஒரு ரூபாய் கடன் கூட அரசால் தள்ளுபடி செய்யப்படவில்லை. நீரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி மற்றும் அனில் அம்பானி பிரதம ரால் ஆதாயம் அடைந்துள்ளனர். ஆனால் விவசாயிகளையும், இளைஞர்களையும் பிரதமர் கண்டு கொள்ளவில்லை. செல் போன்களும், டி சர்ட்டுக்களும் சீனாவிடம் இருந்து வாங்கப்படு கின்றது. பிரதமரின் மேக் இன் இந்தியா தோல்வியடைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.