பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சிறந்த சே

அட்லாண்டா, அக்.11- அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத் தில் நடைபெற்று வரும் அமெரிக்கன் காது, மூக்கு, தொண்டை அகாடமி யின் 122ஆவது வருடாந் திர மாநாட்டில், நிகழும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அகாடமியின் பெருமைமிகு விருதான நிகில்பட் அவர்களின் சர்வதேச மனிதாபிமான விருது தமிழ்நாட்டைச் சார்ந்த ஆசியாவின் தலைசிறந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், இவ்விருதை பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கிய தின் பொருட்டு அமெரிக் கன் அகாடமி அளித் திருக்கும் விளக்கத்தில், பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் அவர் களது முழு அர்ப் பணிப்பு, உண்மை, நேர்மை, மனித சமூகத் திற்கு தான் ஏற்றுக் கொண்ட துறையின் மூலமாக செய்து வரும் தன்னலமற்ற சேவை ஆகியவைகளை கருத்தில் கொண்டு இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் பொருளா தார ரீதியில் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட நிலை யில் உள்ளவர்களுக்கு தனது மேலான சேவை யை அளித்து வருவதை அகாடமி பாராட்டி இவ் வுயர்ந்த விருதை அளித்து மரியாதை செய்து பாராட்டியுள்ளது.