மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி, அக்.11- ரபேல் போர் விமானம் வாங்கு வதில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக காங் கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகள் மோடி தலைமை யிலான பா.ஜ.க. அரசு மீது குற்றம் சாட்டிய துடன், இந்த ஊழல் முறை கேட்டில் முறையான நீதி வேண் டும், எனவே இந்த ஊழல் முறை கேட்டினை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தர விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக் கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு ரபேல் போர் விமானங்கள் வாங்கு வதற்குரிய பின்பற்றப்பட வேண் டிய நடைமுறைகள் மற்றும் ஒப்பந் தங்கள் அனைத்தையும் வரும் 29ஆம் தேதிக்குள் உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்ய வேண் டும் என்று உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத் துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதேபோன்று வழக்கறிஞர் வினீத் தாண்டா என்பவரும் உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த இரு மனுவையும் சேர்த்து விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் என்பவர் தனது வழக்கறிஞர் தீரஜ் குமார் சிங் மூலமாக ரபேல் ஒப்பந்தம் தொடர் பாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் பூனா வாலா உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில், ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், விமானத்தின் விலை விவரத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் நேற்று காலை விசாரணைக்கு வந்தன. அப்போது அனைத்து வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசா ரித்தது. மத்திய அரசு சார்பில் மூத்த வழக் கறிஞர் வேணுகோபால் ஆஜராகி இது அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்ட வழக்கு, இதில் மத்திய அரசுக்கோ, பிரதமருக்கோ நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டார். எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ரபேல் போர் விமானங்கள் வாங்கு வதற்கான பின்பற்றப்பட வேண்டிய நடை முறைகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட அனைத்து விவரங்களையும் அக்டோபர் 29ஆம் தேதிக்குள் சீலிடப்பட்ட கவரில் உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட துடன் வழக்கின் விசாரணையை அக்டோபர் 29க்கு ஒத்தி வைத்தது.