கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில்

சென்னை, அக்.11- சென்னை புதிய தலைமைச் செயல கம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி ஆணையம் கலைக்கப் பட்டபின் ஆணையத்தின் விசா ரணை விபரங்கள் அனைத்தையும் தமிழக அரசிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நேரடியாக அனுப்பியது ஏன்? என்று கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மனு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி வரும் வெள்ளிக்கிழமைக்குள் (12ஆம் தேதி) பதிலளிக் கும்படி உத்தர விட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு :- புதிய தலைமைச் செயலகம் கட்டப் பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக பொய் புகார் புனைந்து, இதனை விசா ரிப்பதற்காக நீதிபதி ரகுபதி தலைமை யில் ஒரு ஆணையத்தை அ.தி.மு.க. அரசு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே அமைத்தது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த கழக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் பட்டது. இதில் முறைகேடுகள் நடந் துள்ளதாக பொய் புகாரின் பேரில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகு பதி தலைமையில் விசாரணை ஆணை யம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணையத்துக்கு தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு தடை உத்தரவு பெறப்பட்டது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்தது ஏன்? இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப் போது, விசாரணை ஆணையத் துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஏன் அதற்கு கோடிக்கணக்கில் தமிழக அரசு செலவழிக்க வேண்டும்? இத் தனை ஆண்டுகளாக அந்த ஆணை யத்துக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று கோடிக்கணக்கான பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய் கிறது? மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகிறது என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுபதி ஆணையம் கலைப்பு! தொடர்ந்து இந்த வழக்கின் விசார ணையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி யால் அமைக்கப்பட்ட ஆணையம் இது; இதனைக் கலைக்க வேண்டும் என்று தி.மு.க., தரப்பில் வாதம் வைக்கப்பட் டது. அரசு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பின்னர், ரகுபதி ஆணையத்தை கலைத்து அதிரடி உத்தர விட்டார். ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு! அடுத்த 2 வாரங்களில் அலுவல கத்தை காலி செய்யவும் உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. ஆவணங்கள் அனைத் தையும் அரசிடம் ஒப்படைக்க வேண் டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் இதுவரை செயல் படாத விசாரணை ஆணையங்கள் எவை, எவை என்பதை தமிழக அரசு கண்டுபிடித்து அவற்றை கலைக்க 4 வாரங்களுக்குள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். விசாரணை ஆணைய நீதிபதிகள் அரசு பங்களாக்களில் தங்கியிருந்து விசாரிப்பது சரியில்லை. அரசு பங்க ளாக் களை காலி செய்துவிட்டு அரசு அலுவல கத்தை விசாரணைக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி அப்போது கூறியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிலையில் ரகுபதி ஆணை யத்தை கலைக்க நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டு, ரகுபதி ஆணையம் இதுவரை நடத்திய விசாரணையின் விபரங்களை தமிழக அரசிடம் அளிக்கு மாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால் தமிழக அரசோ ரகுபதி ஆணையத்தின் விசாரணை அறிக் கையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது. தலைவர் மு.க.ஸ்டாலின் மனு! இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன்பு நேற்று (10.10.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மகாதேவன், ரகுபதி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறைக்கு வழங்க உத்தரவிட்டது தொடர்பாக தமிழக அரசு வரும் வெள்ளிக்கிழமைக் குள் (12ஆம் தேதி) பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.