ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

புதுடெல்லி, அக்.11- ரெப்போ ரேட் விகிதத் தின் அடிப்படையில் வாடிக் கையாளர்களுக்கான வட் டியை வங்கிகள் குறைக்காதது ஏன்? என்று ரிசர்வ் வங் கிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளது. ரெப்போ ரேட் என்பது குறுகிய கால கடன் வட்டி விகிதம் மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த நிலையில் மணி லைப் பவுண்டேசன் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது இந்த மனு உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது உத்தரவில், ரெப்போ விகித அடிப்படை யில் வாடிக் கையாளர் களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது ஏன்? இதுகுறித்து ரிசர்வ் வங்கி மவுனம் காப்பது ஏன் என புரியவில்லை. வட்டி குறைப் பின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உள்பட மனுதாரரின் அனைத்து குற்றச்சாட்டுகளுக் கும் டிசம்பர் 26க்குள் ரிசர்வ் வங்கி, நீதிமன்றத்தில் சரியான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என உத்தர விட்டார்.