மத்திய - மாநில அரசுகளுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ

சென்னை, அக்.11- பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் செய்த தமிழக இராணுவ வீரர் ஜெகன் குடும்பத்திற்கு தமது ஆறுதலைத் தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ள கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சோகத்தின் துயரப் பிடியிலிருந்து இராணுவ வீரர் ஜெகனின் குடும்பத்தை மீட்க உரிய நிதியுதவி வழங்கிட உடனடி நடவடிக்கை எடுத்திடுவீர்! என மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று விடுத்த அந்த இரங்கல் செய்தி வருமாறு :- கன்னியாகுமரி மாவட்டம் - பருத்திக் காட்டு விளையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெகன், பஞ்சாப்பில் பயங்கரவாதி களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடை பெற்ற துப்பாக் கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையடைந்தேன். நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய் திருக்கும் அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராணுவ வீரரின் மனைவிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெறவிருந்த நிலையில், கணவனை இழந்து அந்தக் குடும்பம் ஒட்டுமொத்தமாக சோகத்தில் மூழ்கியுள்ளது, இதயத்தைக் கலங்க வைக்கிறது. இராணுவ வீரரை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கும், தாயார் மற்றும் சகோதரிகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றித் தவிக்கிறேன். நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்துள்ள தமிழக வீரர் ஜெகனின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவிகளை வழங்கி, சோகத்தின் துயரப் பிடியிலிருந்து அந்தக் குடும்பத்தை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.