ஆடலரசன் எம்.எல்.ஏ. கோரிக்கை!

திருவாரூர், அக். 11 - அரசு மருத்துவமனை களில் அளிக்கப்படும் சிகிச்சைகளை ஏழை, எளிய மக்கள் முழுவதும் பயன் பெறும் வகையில் அரசு மருத்துவர்கள் மற் றும் மருத்துவமனை ஊழி யர்களுக்கு பயோமெட் ரிக் வருகைப் பதிவை அமல்படுத்த வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ப.ஆடலரசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளி யிட்டுள்ளார். ஆடலரசன் எம்.எல்.ஏ. தமது அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் ஏழை, எளிய மக்கள் தங்களுக் கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். கழக அரசு ஆட்சியில் இருக்கின்றபோது ஏழை, எளிய மக்களுக்கான சிகிச்சையை உறுதிப்படுத் தும் வண்ணம் கலைஞர் காப்பீடுதிட்டம் உரு வாக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் அறுவை சிகிச் சைகளை இலவசமாக செய்துகொள்ள வழி வகைகள் செய்யப்பட்டு தரமான சிகிச்சையும் காலத்தோடு அளிக்கப் பட்டது. ஆனால் தற்போது நடக்கும் ஆட்சியில் முத லமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டம் என்கிற பெயரில் கலை ஞர் காப்பீடுதிட்டம் பெயர்மாற்றப்பட்டு இருக்கிறதேயொழிய அதற்கான பயன்பாடு என்பது மிகவும் குறுகி யிருக்கிறது. கழக ஆட்சி யில் கலைஞர் காப்பீடு திட்டம் பல தனியார் மருத்துமனைகளிலும் விரிவு படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் அந்த நிலை கடைப்பிடிக் கப்படுவதில்லை. விரிவுபடுத்தப்பட்ட தனியார் மருத்துவமனை களிலும் காப்பீடு திட் டத்தில் சிகிச்சை அளிக் கப்படாமல் நோயாளி கள் திரும்ப அனுப்பப் படும் சூழலே நிலவுகிறது. வெகு சில தனியார் மருத் துவமனையில் காப்பீடு திட்டத்தில் அளிக்கப் படும் ஓரிரு சிகிச்சை களுக்கும் அரசு அந்த தொகையை அவர் களுக்கு திரும்ப வழங்கு வதில் தாமதம் ஏற்படு கிறது. அரசால் வழங்கப் படும் அந்த தொகையி லும் சில இடங்களில் கமிஷனும் கேட்கப்படு கிறது என்பது வேதனை யான செய்தியாகும். அரசு மருத்துவமனை களில் பொதுமக்களுக் கான பொது சிகிச்சை (டீ.ஞ) காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 வரை அளிக்கப்பட வேண் டிய நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை என்பது முறையாக பேணப்படுவதில்லை. அரசு மருத்துவ மனை களில் சமீபத்தில் ஆய்வு களை மேற்கொண்ட போது அங்கேமருத்து வர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர் கள் ஆகியோரின் வருகை பெரும்பாலும் தாமத மாகவே இருந்ததை காண முடிந்தது. இத னால் நோயாளிகள் காத் திருக்க வேண்டிய கட் டாயம் ஏற்படுகிறது. ஒரு மணி நேர தாம தம் என்பது ஒரு மருத் துவமனையில் சுமார் 50 நோயாளிகளுக்கு அளிக் கப்படும் சிகிச்சைக்கான நேரமாகும். ஒருநா ளைக்கு 50 நோயாளிக ளுக்கு சிகிச்சை கிடைக்க வில்லை எனில், ஒரு மாதத்திற்கு 1500 நோயாளி களின் சிகிச்சை தவிர்க் கப்படுகிறது. ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 1500 நோயாளி கள் எனில் தொகுதியில் உள்ள சுமார் 10 மருத்துவ மனைகளில் 15000 நோயா ளிகளின் சிகிச்சை மறுக் கப்பட்டு விடுகிறது என் பதை அரசும், சுகாதாரத் துறையும் உணர வேண் டும். எனவே பொதுமக்க ளுக்கு ஏற்படும் இந்த அசௌகரியங்களை நிவர்த்தி செய்யும் வகை யில் அரசு மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பயோமெட்ரிக் வருகைப் பதிவை உறுதி செய்யவேண்டும் என் பதையும் அரசு காப்பீடுத் திட்ட பலன்களை தகுதி யுடைய தனியார் மருத் துவமனைகளிலும் தடை யின்றி செயல் படுத்த வேண்டும் எனவும் அரசுக்கும், சுகாதாரத் துறைக்கும் கோரிக்கை யாக வைக்கிறேன். இவ்வாறு ஆடலரசன் எம்.எல்.ஏ. தமது அறிக் கையில் தெரிவித்துள் ளார்.