மாவட்டப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எ

கிருஷ்ணகிரி, அக்.11- தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட் டுள்ள வாணி ஒட்டு தடுப்பணை திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து டி.செங் குட்டுவன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம் வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட் டத்தின் மையப்பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநி லம், சிக்பெல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள நயதி மலையில் உற்பத்தி யாகி தமிழக எல்லையில் உள்ள கொடியாளம் அணை, கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, தருமபுரி மாவட் டம் ஈச்சம்பாடி அணை, அனுமன் தீர்த்தம் வழி யாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு சென்று அங்கிருந்து விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழி யாக கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட் டத்தில் வாணி ஒட்டு என்கிற இடத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, வலது, இடது புற கால்வாய்களை வெட்டி, மேற்படி வலது புற கால் வாய் பாலிகானூர், பூவத்தி, ஆலப்பட்டி, கொடுகூர், பாலகுறி, இட்டிக்கல் அகரம், மோரமடுகு, சோக்காடி, சாப்பரம், மோரன அள்ளி, பாரத கோயில், கதிரிபுரம், பன்னி ஹள்ளி, ஜெகதாப், புதூர், கரடி ஹள்ளி வழியாக, தரும புரி மாவட்டம் காரிமங் கலம் வழியாக வலது புறக் கால்வாயும், இடது புறக் கால்வாய் புளியஞ் சேரி, பீமாண்டப்பள்ளி, குந்தப் பள்ளி, குப்பச்சிப் பாறை வழியாக மார சந்திரம் தடுப்பணைக்கு வந்து அங்கிருந்து ஏற்கனவே பெரிய ஏரிக்கு வெட்டப் பட்டுள்ள கால்வாய் மூலம் பெரிய ஏரிக்கு வயது, படேத லாவ் கால் வாய்க்கு நீர் வழங்கிட வும், காய்ந்து போன ஏரிகளை நிரப் பிடவும் கடயத 2006-2011 தி.மு.க. ஆட்சியில் திட்டம் தீட் டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டது. 2011ல் ஆட்சி மாற்றத் திற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் மேற்படி திட் டம் அறவே கைவிடப் பட்டு கிடப்பில் போட்டு விட்டார்கள். 2011-2016 அ.தி.மு.க. ஆட்சி காலத் தில், தி.மு.கழக சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின் அவர்கள், வேப்பன ஹள்ளி சட்ட மன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனது கோரிக் கையை ஏற்றுக் கொண்டு பலமுறை திட்டம் நிறை வேற பேசினார். பலன் தான் இல்லை. இதோ, அதோ என வாய்ஜாலம் பேசியே ஐந்தாண்டு காலத்தை ஓட்டி விட் டார்கள். 2016ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. இன்றுவரை மேற்படி தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற முன்வரவில்லை. சர்வே செய்கிறோம் என்கிற பெயரால், மக்கள் பிரதிநிதிக ளுக்கோ, விவ சாயிகளுக்கோ தெரியா மல், அலுவலர்களே கால் வாய் செல்லும் வழியை கண்டறிவது இயலாது. ஏற்கனவே உள்ள எண்ணேகொல் தடுப்ப ணையை உயர்த்தி கட்டும் திட்டம் உள்ள தாகவும் அறிகிறோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு எண்ணே கொல் தடுப்பணையிலி ருந்து கால்வாய் வெட்டி நீரை எடுத்து செல்லும் பணி என்பது, ஏதோ ஒப் புக்காக, பெயரள விற்கு வேண்டுமானால் உதவுமே தவிர, இதனால் விவசாய பெருங்குடி மக்களுக்கோ, காய்யது போன நூற்றுக் கணக்கான ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி நிலத் தடி நீரை உயர்த்திட முடி யாது. ஆகவே, மேற்படி திட்டம் முழுமையாக வெற்றிபெற வேண்டு மானால் வாணி ஒட்டு என்கிற இடத்தில் தடுப் பணை கட்டி, நீரை ராட் சத பைப்புகள் மூலமா கவோ அல்லது திறந்த கால்வாய் மூலமோ கொண்டு சென்றால் மட் டுமே, இம்மா வட்டத்தில் உள்ள காய்ந்து போன ஏரி களுக்கு தண்ணீர் விட்டு, நிலத்தடி நீரை உயர்த்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆகவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள், பொதுப்பணித்துறையுடன் கலந்து, மக்கள் பிரதிநிதி களையும் கலந்து, நல்ல முடிவிற்கு வந்து அதன் பின் சர்வே செய்து அர சிற்கு இறுதி அறிக் கையை சமர்ப்பிக்க வேண்டுமாய் மாவட்ட திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார் பிலும், மக்கள் பிரதிநிதி கள் சார்பிலும் வலியு றுத்தி கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு மாவட்டச் செயலாளர் டி.செங்குட் டு வன் எம்.எல்.ஏ., தனது மனு வில் தெரிவித் துள்ளார்.