சென்னை கலைவாணர் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது!

சென்னை, ஆக.11 கழகத்தின் போர்வாளும் கேட யமுமான முரசொலி பவள விழாவை யொட்டி, சென்னை - கலைவாணர் அரங்கில் நேற்று மாலை, பல்வேறு பத்திரிக்கைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும், கலை யுலகினரும் பங்கேற்ற மாபெரும் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் கலைஞானி கமல் ஹாசன் - கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரை யாற்றினர். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். இவ்விழாவில் பல்லாயிரக்கணக் கான கழகத் தோழர்களும், பொதுமக் களும் பங்கேற்று விழாவை மிகுந்த சிறப்புக்குரிய நிகழ்வாக்கினர். முரசொலியின் நீண்ட நெடிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க விழாவாக, இவ்வாழ்த்தரங்கம் நிகழ்ந்தேறியது என்றால் அது மிகையல்ல! முரசொலி பவளவிழாக் கொண் டாட்டங்களின் முதல் நிகழ்வாக, நேற்று காலை, முரசொலி காட்சி அரங்கத்தின் திறப்பு விழா மிகுந்த சிறப்புடன் நடை பெற்றது. தளபதி அவர்களின் ஈடுஇணையிலா உழைப்பினாலும், முரசொலி ஆசிரியர் செல்வம் அவர்களின் சீரிய மேற்பார்வை யிலும் எழிலுற அமைக்கப்பட்டுள்ள இக் காட்சி அரங்கினை, ஆயிரக்கணக்கான கழகத்தினர் திரண்ட விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், இந்து குழுமங்களின் தலைவர் என்.ராம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியினை அடுத்து, நேற்று மாலை, சென்னை கலைவாணர் அரங்கில் பவளவிழா மாபெரும் வாழ்த்தரங்கம், நடைபெற்றது. தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு கலைவாணர் அரங்கம் பிரம்மாண்டமாகக் கட்டி முடிக்கப்பட் டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, நேற்று பிற்பகல் தொட்டே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கழகத் தினரும் பொதுமக்களும் கலைவாணர் அரங்கிற்குத் திரண்டு வந்த வண்ண மிருந்தனர். அதனால் பிற்பகலிலேயே அரங்கம் நிரம்பியது. இவ்விழாவிற்கு கழகத்தினர் பெருமள வில் வருவர் என்பதைச் சரியாகத் திட்ட மிட்டு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., இவ்விழாவிற்கு மிகவும் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தார். அரங்கினுள் இருக்கை இல்லாமல், நின்றவாறே நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அரங்கிற்கு வெளியிலோ, அரங்கில் இருந்ததை விடப் பன்மடங்குக் கூட்டம்! அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான இருக்கைகளை ஏற்பாடு செய்திருந்தார், மாவட்டச் செயலாளர்! ஆயினும், ஆயிரமாயிரமாய் திரண்ட கூட்டத்திற்கு முன், அந்த ஏற்பாடுகள் எல்லாம் கூட ஒரு கட்டத்தில் ஈடு கொடுக்க முடியவில்லை எனும் அள விற்கு, அரங்க வளாகத்திலும், அரங்கம் அமைந்த வாலாஜா சாலையிலும் ஆயிரக் கணக்கில் கழகத்தினர் குவிந்திருந் தனர். விழா, அறிவிக்கப்பட்டபடி மாலை 5.15 மணியளவில் தொடங்கியது. விழாவின் முதல் நிகழ்வாக, முரசொலியின் ஆசிரியர் செல்வம் அவர்கள் வரவேற்புரை யாற்றினார். அதனை அடுத்து - விழாவின் ஒவ்வொரு சிறப்புக்கும் ஒல்லும் வகை யினாலெலாம் தமது உழைப்பைச் சிந்திய தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு முரசொலி செல்வம் அவர்கள் பொன்னாடை அணிவித்தார்! நினைவுப் பரிசு வழங்கினார்!