திராவிடம் என்பது தென்னகத்தோடு நின்று விடாது!

சென்னை, ஆக.11 - பத்திரிகையாளர்கள், கலை யுலகினர் பங்கேற்ற முரசொலி பவள விழா வாழ்த்தரங்கில் உரை யாற்றிய கலைஞானி கமல்ஹா சன், திராவிடம் என்பது தமிழகம், தென்னகத்தோடு நின்று விடாது, நாடு தழுவிய மக்கள் சக்திதான் திராவிடம் என்க் குறிப்பிட்டார். இவ்விழாவில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதாவது:- நீரின்றி அமையாது - இந்த அவையும் மேடையும்! நீர் அனைவரும் இங்கே இருப்ப தால்தான், என் தலை தயக்கமின்றி தாழ்ந்து வணங்குகிறது! இதை மட்டும்தான் நான் இங்கே உட்கார்ந்து தயார் செய்து கொண்டேன், அதுவும், தோள் உரச வைரமுத்து பக் கத்தில் இருந்த காரணத்தால், அந்தப் பக்கம் செயல்தலைவர் இருந்ததனால், ஒட்டிக் கொண்ட தமிழ்! மற்ற தமிழ் எல்லாம் செவி வழிச் செய்திதான். அதில் கேட்ட இரண்டாம் குரல், கலைஞர் அவர்களுடையது. ஏன் இரண்டு என்று சொல்கிறேன் என்றால், எனக்கு சிவாஜி அவர்கள் பேசிய வசனத்தை, அவரே எழுதிக் கொள்வார் என்று நினைத் திருந்த தால், அதுதான் முதல் குரல். ரசிகனாக இருக்கிறேன்! இந்தக் குரல் நன்றாக இருக் கிறதே என்று கேட்ட பொழுது, அந்தக் குரலுக்கு வசனம் எழுதிய வர் இன்னார் என்று தெரியும் வயது வந்தது முதல், நான் இந்த முதியவரின் (கலைஞரின்) ரசிக னாக இருந்து கொண்டிருக்கிறேன் (கைதட்டல்). ரஜினி அவர்கள் இந்த விழா விற்கு வருகிறாரா? என்று நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு, அவர் வருகிறார் என்றார்கள். அவரும் பேச இருக்கி றாரா? என்று கேட்டேன். இல்லை. அவர் கீழே உட்கார்ந்து கொண்டு விழாவைப் பார்க்கிறார் என்றார் கள். அப்படியானால் நானும் கீழே உட்கார்ந்து கொள்கிறேன் என்றேன். (சிரிப்பு) ரஜினியோடு கீழே அமர்ந்து கொண் டால், கையைப் பிடித்துக் கொள்ள ரஜினி இருப்பார், நாம் வம்பிலே மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று நினைத் தேன். (சிரிப்பு) ஆனால் விழா அழைப்பிதழ் எல்லாம் கொடுத்து விட்டுப் போன பிறகு நான் கண்ணாடியில் பார்த் துக் கொண்டிருந்தேன். தன் மானம்தான் முக்கியம்! எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கவிருக்கிறாய்? இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முத லில் புரிந்து கொள்! தற்காப்பு இல்லை முக்கி யம்! தன்மானம்தான் முக்கியம்! (கைதட்டல், ஆரவாரம்) என்று கூறிக் கொண்டேன். ஏன் அப்படிச் சொல்கி றேன் என்றால், இந்த மேடையில் வீற் றிருக்கும் பெரிய பத்திரிக்கை ஆசிரியர்களுடன், பாதியில் பத்திரிக்கை நடத்த முடியாமல் நிறுத்திய கடைநிலைப் பத்திரிக்கை ஆசிரியனாக இந்த மேடை யில் அமரும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக் கிறது. (கைதட்டல்) இந்த மேடை மாபெரும் வாய்ப்பு. அவர்களுடன் அமரத் தகுதியான வனா என்பதைக் கூட நான் யோசித்துப் பார்க்காமல், வாய்ப்பைப் பறித்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை (கைதட்டல்) இன்று வரை பதில் சொல்லவில்லை! என்னைக் கேட்கிறார்கள்; எங்கே அந்த மேடையில் போய் கழகத்தில் சேரப் போகிறீர்களா? என்று ஒரு கேள்வி டுவிட்டரில் எல்லாம் வரு கிறது. அப்படிச் சேருவதாக இருந்தால், 1983ல் கலைஞர் அவர்கள் அனுப்பிய ஒரு டெலிகிராம் எனக்கு வந்து சேர்ந்தது. அது ஒரு கேள்வி. அந்தப் பெருந் தன்மையை நான் இன்றும் மறக்க மாட்டேன், என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரக் கூடாது? என்று கேட்டு ஒரு டெலிகிராம் வந்தது. (தலைவர் கலைஞரின் செயலரை நோக்கி, உங்களுக்கு அது தெரிந் திருக்கும் என்கிறார் கமல்.) அந்த டெலிகிராமை வெளியே காட்டவும் தைரியம் இல்லை, பதில் சொல்லவும் தைரியம் இல்லை. என்னன்னு சொல் வேன் நான்? அதை அப்படியே மடித்து உள்ளே வைத்துக் கொண்டேன். அதற்கு நான் இன்று வரை பதில் சொல்லவில்லை. மூதறிஞர்களுக்கு உரிய தன்மை! அவருடைய (கலைஞருடைய) பெருந்தன்மை என்ன வென்றால், அதற்குப் பிறகு அவர் அதைக் கேட்கவில்லை. (கைதட்டல்) அது மூதறிஞர்களுக்கு, பெரியவர் களுக்கே உரிய தன்மை. அந்த மரி யாதை இந்த மேடையிலும் கிடைக் கும் என்ற நம்பிக்கையில் இங்கே நான் வந்திருக்கிறேன். (கைதட்டல்) ஒருவரை ஒருவர் விமர்சித்தும், கிண்டலடித்தும் பேசியவர்கள் எல்லாம், இந்த மேடையில் இருக் கும் இந்தப் புதிய கலாச்சாரத்தை நானும் பயில இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். விகடன் சீனிவாசன், அவர்கள் பேசும் போது, எங்கள் பத்திரிக்கை யைப் பற்றி பூணூல் பத்திரிக்கை என்றும், பாரம்பரியப் பத்திரிக்கை அதனைத் தொடர்ந்து - 75 ஆண்டு கால முரசொலியின் வரலாற்றில், அதன் வளர்ச்சிக்கு அவ்வக் காலத்தில் தங்கள் உழைப்பினைச் சிந்திய பெரு மக்களுக்கு சிறப்புச் செய்திடும் நிகழ்வு தொடங்கியது. அதற்கு மிகவும் பொருத்த மாக, உறுதுணையாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிடல் என அழகான அடைமொழி யிட்டு அறிவித்தார், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன். ஆம்! எழிலும் எழுச்சியும் நிறைந்த அந்நிகழ்வுக்கு தமிழச்சியின் தொகுப்புரை, மேலும் பெருமையும் சிறப்பும் சேர்த்தது என்றால், அது மிகையல்ல! உறுதுணையளாளர்களுக்கு சிறப்புச் செய்திடும் வகையில், ஒவ்வொருவரும் அழைக் கப்பட்டு, அவர்களுக்குத் தளபதி அவர்கள் கரங்களால் பொன் னாடை அணிவிக்கப்படடு நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. இப்பணிக்கு முரசொலியின் தலைமை நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்து ஒத்துழைப்பு நல்கினார். தந்தை வழியில், அவர் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்திடும் தனயனன்றோ அவர்! முரசொலி செல்வம் அவர் களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இயக்குநர் அமிர்தம் அவர்களுக்கும் தளபதி அவர்கள் பொன்னாடைகள் அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்தார். அவ்வேளையில், எவரும் எதிர்பார்த்திடா வகையில் மின் னல் கீற்று போல, அரங்கினுள் நுழைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்! அவரது வருகையால் மேலும் குதூகலமடைந்த ஆயிரமாயிர வர் எழுப்பிய கரவொலி மற்றும் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது என்றால் அது மிகையல்ல. இந்த ஆரவாரப் பேரொலி அடங்க, சிறிது நேரம் ஆயிற்று! சூப்பர் ஸ்டாரின் வருகையின் மூலம் விழா மேலும் சூடு பிடித்தது. எத்துணை உயர்விலும் எளிமையைக் கடைபிடிக்கும் ஏற்றமிகு மனிதரன்றோ சூப்பர் ஸ்டார்! தளபதி மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட மேடையில் வீற்றிருந்தோ ருக்கும், அரங்கம் மற்றும் வெளியே திரண்டிருந்த ஆயிர மாயிரவர்க்கும் வணக்கம் தெரி வித்து மகிழ்ச்சி தவழ இருக்கை யில் அமர்ந்தார், சூப்பர் ஸ்டார்! உறுதுணையாளர்களுக்கு பொன்னாடை - நினைவுப் பரிசு! மீண்டும் உறுதுணையாளர் களைப் பெருமைப் படுத்திடும் நிகழ்வு தொடங்கியது! எழுத்தாளர் சொர்ணம், மு.க.தமிழரசு, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், எஸ்.ஏ.எம்.உசேன், க.திருநாவுக்கரசு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தலைவர் கலைஞர் அவர் களின் செயலாளர்கள் கோ.சண் முகநாதன், கே.ராஜமாணிக்கம், தணிக்கையாளர் சிவசுப் பிரமணியன், மூத்த கணக்காளர் ஏ.எல். அழகு மாணிக்கம், முரசொலியின் மூத்த நிர்வாகி மோகன்தாஸ் அவர் களின் சார்பில், அவரது புதல்வர் அசோகன், முரசொலி மலர்க்குழுத் தயாரிப்பில் பெரிதும் பாடுபட்ட புலவர் முத்துவாவாசி, முனைவர் ராமு முரசொலியின் முதல் மேலா ளர் சி.டி.தட்சிணா மூர்த்தி, முரசொலி தலைமை நிர்வாகி உதயநிதி ஸ்டாலின், நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோ ருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முரசொலி அறக்கட் டளை சார்பில் பொன்னாடைகள் அணிவித்து நினைவுக் கேடயங் கள் வழங்கினார். உறுதுணையாளர்களுக்கு சிறப்புச் செய்திடும் நிகழ்வினை அடுத்து - வாழ்த்தரங்கம் தொடங்கியது! வாழ்த்தரங்கில்; நக்கீரன் ஆசிரியர் கோபால், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ் குமார், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண்ராம், டெக்கான் கிரானிக்கள் ஆசிரியர் பகவான் சிங், தினமலர் இணை ஆசிரியர் ரமேஷ், ஆனந்த விகடன் குழுமத் தின் மேலாளர் இயக்குநர் பா.சீனிவாசன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சூப்பர்ஸ்டாருக்கு தளபதி பொன்னாடை - நினைவுப்பரிசு! இம்மாபெரும் விழாவில், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்பினை ஏற்று, பங்கேற்றுச் சிறப்பித்த சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார். அவருக்கு, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பொன் னாடை அணிவித்தார். அப்போது, கமல்ஹாசன் அவர்களும் அருகில் வர, தளபதியும் கமல்ஹாசனும் இணைந்து - ரஜினிகாந்த் அவர் களுக்கு நினைவுப் பரிசு வழங் கினர். அது கண்டு அரங்கினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தளபதிக்கு நன்றி தெரிவித்து, தமது இருக்கையில் சென்று அமர்ந்தார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! சிந்தைமிகு உரை நிகழ்த்திய வைரமுத்து - கமல்ஹாசன்! அதனை அடுத்து, கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்க வருமாறு அழைக்கப்பட்டார். தினத்தந்தி நாளிதழனின் தலைமைப் பொது மேலாளர் சந்திரன் இந்து என்.ராம் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நன்றியுரையாற்றினார். விழாவின் முத்தாய்ப்பாக கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிந்தனைக்கு விருந்தான சீரிய உரை அது என்றால், அது மிகையல்ல! வாழ்த்துரையாற்ற வந்த சிறப் விருந்தினர்கள் அனைவருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் கள், பொன்னாடை அணிவித்து நினைவுக் கேடயம் வழங்கினார். இவ்விழாவினையொட்டி, பிரம்மாண்டமான கலைவாணர் அரங்கினை, மாவட்டச் செய லாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., அழகுமிளிரும் ஒளி விளக்குகளால் அலங்கரித்து வர்ணஜாலம் காட்டியிருந்தார். பி.கே.சேகர்பாபு - நிகழ்ச்சிக்கு சீரும் சிறப்புமிக்க ஏற்பாடு! இதுபோல இனியொரு விழா அங்கு நடைபெறுமா? என, விழாவில் பங்கேற்றோர் பேசிக் கொள்ளும் அளவிற்கு, அத்துணை சீரும் சிறப்பும் மிக்கதாக அவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார், மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு! அவரது பேருழைப்புக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், இவ்விழாவில் கழகத்தினர் அலை அலையாய்ப் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இவ்விழாவில், நீதியரசர் எஸ்.மோகன், மூத்த இருதய நிபுணர் தணிகாசலம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தொழிலதிபர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், வேணு சீனிவாசன், நடிகர் பிரபு, காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பேராயர் எஸ்றாசற்குணம், திருமதி செல்வி செல்வம், திருமதி சாந்தா ஸ்டாலின், திருமதி மோகனா தமிழரசு, கனிமொழி எம்.பி. திருமதி.கிருத்திகா உதயநிதி, சபரீசன், திருமதி செந்தாமரை சபரீசன் உள்ளிட்ட தலைவர் கலைஞர் குடும்பத் தினர், முன்னாள் மத்திய-மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள், பல்வேறு துறைகளையும் சேர்ந்த முன்ன ணிப் பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.