திராவிட இயக்கத்தின் 75 ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட முரசொலி பவளவிழா தொடங்கியது!

சென்னை, ஆக. 11 - தலைவர் கலைஞர் அவர்கள், தமது மூத்த பிள்ளை என உச்சி முகர்ந்திடும் முரசொலி யின் 75ஆம் ஆண்டு பவள விழாக் கொண்டாட்டங்கள் நேற்று காலை மிகுந்த எழுச்சியுடன் தொடங்கின! கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இரவு பகல் பாராத ஈடிணையிலா உழைப் பினால் கருத்துக்கு விருந்தான பல்வேறு நிகழ்ச்சிகள் வரிசையில் முதல் நிகழ்வாக முரசொலி காட்சி அரங்கத்தின் தொடக்க விழா நேற்று காலை முரசொலி வளாகத் தில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்கள், காட்சி அரங்கத் தைத் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னணியினர், கழகத் தோழர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்ன ணிப் பெருமக்கள் என முரசொலி வளாகம், ஆயிரமாயிரவர் திரண்டு விழாக் கோலம் பூண்டது. இவ்விழா பற்றிய விபரம் வருமாறு:- தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை என்ற பெருமைக் குரியது; கழகத்தினரின் கைவா ளாய் பாதுகாப்புக் கேடயமாய் விளங்கும் முரசொலி நாளேடு. அது 75 வயது நிறைவடைந்து பவள விழாக் காணும் பெருமைமிகு தருணம் இது! கலைஞரின் சிந்தனைகளை ஏந்தி நிற்கும் கண்கவர் ஏடு! தன் இளமைப் பருவத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, புலி - வில் - கயல் சின்னங்கள் பொறித்த தமிழ்க் கொடியை கைகளில் ஏந்தி, ஆதிக்க இந்தி மொழிக்கு இந்த மண்ணில் இட மில்லை என்று தமிழ் காக்கும் போரில் ஈடுபட்ட தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளை ஏந்தி நின்ற இதழன்றோ முரசொலி. நாடகம், திரைப்படம், தொலைக் காட்சி என தலைவர் கலைஞர் அவர்களின் படைப்புகள் வெற்றிக் கொடி நாட்டாத துறைகளே இல்லை. எந்தத் துறையாக இருந் தாலும் அங்கே தன் கொள்கை முழக்கத்தை முன்வைத்து, மக்கள் மனதில் பதியவைத்த பாங்கு தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தாற்ற லுக்கு உண்டு. அவரின் மூத்த பிள்ளையான முரசொலியின் நெடிய பயணமும் திராவிட இயக் கத்தின் கொள்கை முழக்க மாக - தமிழர் நலம் காக்கும் உரிமைக் குரலாக அமைந் துள்ளது என்றால் மிகை யில்லை. செய்திகளை வரலாறாக்கிய பெருமை கொண்ட முரசொலி! முரசொலி இதழ்களைத் தூக்கிச் சுமந்து, துண்டறிக் கையாக அதனை வெளி யிட்ட காலம் முதல், இன்று சென்னையில் தனி அலுவல கத்துடன் தனித் துவம் மிக்க செய்திகளுடனும் உயரிய தொழில் நுட்பத் துடனும் வெளியாகும் காலம் வரை, முரசொலி கடந்த வந்த பாதையும், அந்தப் பாதையில் சந்தித்த இடர்ப் பாடுகளும்-நெருக்கடி களும், அவை அனைத் தையும் எதிர்கொண்டு இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று தன் தலைப் பில் சூடியுள்ள பொன் மொழிக்கேற்ப ஒவ்வொரு செய்தி யையும் வரலாறாக்கிய பெருமை முரசொலிக்கு உண்டு.