காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்!

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழக அவசர செயற்குழுக் கூட்டம் 12.8.2017 - சனிக்கிழமை காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் (மாவட்டக் கழக அலுவலகம்) மாவட்டக் கழக அவைத் தலைவர் சி.வி.எம். அ. பொன் மொழி தலைமையிலும் மாவட்டக் கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் - தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய - நகர - பேரூர்க் கழகச் செயலாளர்கள், மாநில - மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொருள்: கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, காஞ்சிபுரத்தில் 16.8.2017 அன்று நடைபெற உள்ள விவசாயிகள் உரிமைப் போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்வது சம்பந்தமாக, மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து.