கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தலைமையுரை! திராவிடர் கழகத் தலைவ கி.வீரமணி வாழ்த்துரை!

சென்னை, ஆக. 12- முரசொலி பவள விழா மலர் வெளியீட்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெற்றது. அதுபோது பலத்த மழை கொட்டத் தொடங்கியது. இதனிடையே விழா மலரை தளபதி மு.க.ஸ்டாலின் அவர் கள் முன்னி லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக் கண்ணு வெளியிட, முரசொலி யின் முதல் மேலாளர் சி.டி.தட் சிணாமூர்த்தி பெற்றுக் கொண்டார். இந்த விழா கொட்டும் மழையினால் நேற்று முழுமைப் பெறாமல் ஒத்தி வைக்கப் பட்டது. கொட்டும் மழைக்கு நடுவே உரையாற்றிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் ஒரு நாள் நிச்சயமாக இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்விழா இதைவிடப் பெரிய அளவில் நடை பெறும்! என்று உறுதியளித்தார். கழகத்தின் போர்வாளும் கேடயமுமான முரசொலியின் பவள விழாவினை கழகச் செயல் தலைவரும், முரசொலி அறக்கட்ட ளையின் நிர்வாக அறங்காவபலரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இருநாட்கள், ஈடு இணையிலா விழாக் கள் எனும் இலட்சிய நோக்கோடு, பிரம்மாண் டமாக நடத்திடத் திட்டமிட்டு, நிகழ்ச்சி நிரல் வகுத்தார். முதல் நாளான நேற்று முன் தினம் (10.8.2017 - வியாழக்கிழமை) காலை, முரசொலி அலுவலக வளா கத்தில் முரசொலி ஆசிரியர் செல்வம் அவர்களின் மேற்பார்வை யில், எழிலுற உருவாகியுள்ள முர சொலி பவள விழா காட்சி அரங் கின் திறப்பு விழா நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு விழாவில் தி இந்து குழுமத் தலைவர் என்.ராம் அவர்கள், பவள விழா கண் காட்சி அரங்கினைத் திறந்து வைத்தார். ஆயிரக் கணக்கான கழகத் தினர் திரள, இவ்விழா சிறப்புற நடைபெற்றது. முரசொலியின் நெடிய வரலாற் றில் பொன்னேட்டில் பொறிக்கத் தக்க நிகழ்வாக, பவளவிழாக் காட்சி அரங்கத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவினை அடுத்து, நேற்று முன்தினம் மாலை சென்னை - கலைவாணர் அரங்கில், பத்திரி கையாளர்கள், கலையுலகினர் பங்கேற்ற மாபெரும் வாழ்த்தரங் கம் நடைபெற்றது. இதில் பல்வேறு பத்திரி கைகளின் அதிபர்களும், ஆசிரி யர்களும் கலந்து கொண்டு வாழ்த் துரை நிகழ்த்தினார்கள். கலை உலகின் சார்பில் கலை ஞானி கமல்ஹாசன் பங்கேற்று - முரசொலியை வாழ்த்தி முத்தாய்ப் பானதோர் சிறப்புரை நிகழ்த்தினார். இவ்விழாவின் கூடுதல் சிறப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பெருமை சேர்த்தார். இவ்விழாவில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று, நிகழ்ச் சிக்கு எழுச்சி சேர்த்தனர். பவளவிழாக் கொண்டாட்டங் களின் நிறைவாக, சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலில், முரசொலி பவள விழா மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தளபதி மு.க.ஸ்டாலின் அவர் கள் விழைவினை நிறைவேற்றும் வகையில், மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., இவ் விழாவினைச் சிறப்புற நடத்திட இரவு பகலெனப் பாராது பாடு பட்டார். இப்பொதுக்கூட்டத்திற்கு, ஒரு மாநாட்டிற்கு உரிய அளவிற்கு விரி வான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.ஒய்.எம்.சி.ஏ. திடலே ஒளிவிளக் குகளின் பேரொ ளியில் ஜொலித்தது. மதியம் தொட்டே நந்தனம் - ஒய்.எம்.சி.ஏ. திடலில் கழகத்தினர், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குழுமிடத் தொடங்கினார்கள். அண்ணாசாலை நெடுகிலும் கழகத்தினர் சாரை சாரையாகத் தென்பட்டனர். பொதுக்கூட்டத்திற்கு திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டது. மேடையில் முரசொலி எனும் பெயர், பிரம் மாண்டமான வடிவில் கறுப்பு-சிவப்பு வண்ணத்தில் வடிக்கப்பட்டிருந்தது. பவளவிழாவையொட்டி வடிக்கப் பட்ட இலச்சினை; மேடையின் நடுவே அமைக்கப்பட்டு அலங்கரித்தது. ஒரு மாத காலமாகத் திட்டமிட்டு சிறப்பான முறையில் இக்கூட்டத் திற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பொதுக்கூட்டத்தில் கூறப்படும் கருத்துகளை ஆயிரமாயிரவர் செவிமடுக்க கிட்டத்தட்ட ஒரு லட்சம் இருக்கைகள், ஒரு லட்சம் பேருக்கு தாகத் தைத் தணிக்க ஆப்பிள் பழரசம், சுத்திகரிக்கப்பட்ட 10 குடிநீர் டேங்குகள், வெளியூரிலிருந்து வருகை தந்த வாகனங்கள் வரிசை யில் நிறுத்துவதற்கான வசதிகள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பான ஏற்பாடுகளும் மற்றும் 10 இடங்களில் கழி வறை வசதிகள் போன்றவைகளும் செய்யப்பட்டன. முரசொலி வாழ்த்துப்பாடல்! இவ்விழாவிற்கு மாலை 5.45 மணியளவில் தளபதி அவர்கள் வருகை தந்தார். அவரது வருகையை அடுத்து விழா தொடங்கியது. முதல் நிகழ்வாக, முரசொலி வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. கவிஞர் சொற்கோ இயற்றிய வாழ்த்துப் பாடலை திரைப்படப் பாடகர்கள் திருமதி.மாலதி, செந் தில்தாஸ் ஆகியோர், செவிகளுக்கு விருந்தாக இசைத்தனர். அதனையடுத்து - மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர் கள், தாம் கலந்து கொள்ள இயலாமையைத் தெரிவித்து அனுப்பியிருந்த கடிதத்தினைப் படித்தார். பேராசிரியர் அவர்கள் விழாவில் பங்கேற்க இயலாமையால், இவ்விழா விற்கு தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிப்பார் என அவர் அறிவித்தார். அதனை அடுத்து விழாத் தலைமையேற்று துரைமுருகன் உரையாற்றினார். அப்போது - மாலை தொட்டே இருந்த தூரல் பெருமழையாக மாறியது. மாநாடு நிகர்த்த பொதுக்கூட்டம் மழையினால் பாதிக்கப்படுகிறதே என அனைவரும் பதைத்தனர். திரண்டிருந்த பல்லாயிரவரும், மழை சுழன்றடித்த போதும், இருக்கை களில் இருந்து சிறிதும் அகலாமல், அப்படியே இருக்கைகளில் அமர்ந் திருந்தார்கள். பெருமழைக்கு நடுவிலேயே பவளவிழா மலர் வெளியீடு நடை பெற்றது. முரசொலி பவள விழா மலரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு அவர்கள் வெளியிட, அதன் முதற் படியை முரசொலியின் முதல் மேலாளர் சி.டி.தட்சிணாமூர்த்தி அவரிகள் பெற்றுக் கொண் டார். அதனை அடுத்து, மலரை வெளியிட்ட, இரா.நல்லக்கண்ணு அவர்கள் வாழ்த்தி உரை யாற்றினார். நேரம் செல்லச் செல்ல, மழை மேலும் பெருகியது. கூட்டத்தை மேற் கொண்டு நடத்தவே முடியாத சூழ் நிலை ஏற்பட்டது. அந்தக் கொட்டுகிற மழையிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள் வாழ்த்தி உரையாற்றி னார். அதனிடையே, விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் அனைவருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், பொன்னாடை அணிவித்து, நினை வுக் கேடயங்கள் வழங்கி, முரசொலி பவள விழா மலரை அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார். மேலும் இவ்விழாவில் தளபதி அவர்கள், மாநாடு நிகர்த்த இப் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சென்னை தெற்கு மாவட்டச் செய லாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மற்றும் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோ ருக்குப் பொன்னாடைகள் அணி வித்து, நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டி கௌரவித்தார். இதனை அடுத்து முரசொலி பவள விழா நிகழ்வுகளுக்குப் பாடு பட்ட பெருமக்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் கொட்டும் மழையிலேயே நடைபெற்றது. அப்போது தளபதி அவர்களால் கௌரவிக் கப்பட்ட பெருமக்கள் விபரம் வருமாறு:- பவளவிழா காட்சி அரங்க அமைப் பாளர்: பொள்ளாச்சி மா.உமாபதி, பவள விழா மலர் வடிவமைப்பு : கோபி, அரசு ஆர்ட்ஸ், சென்னை கலை இயக்குநர்கள் : பந்தல்சிவா, எஸ்.டி. செல்வம், ஜே.பி.கிருஷ்ணா, ஒலி-ஒளி அமைப்பு: ப.கார்த்தி கேயன், மேடை அமைப்பு: போஸ் பழனி யப்பன், ஒலி-ஒளி அமைப்பு: என்.எஸ்.சவுண்ட் சர்வீஸ் பாலசுப்பிரமணி ஆகியோர் பொன்னாடை அணி வித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதனை அடுத்து துரைமுருகன் அவர்கள், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை உரையாற்ற அழைத்தார். அப்போது, கொட்டுகிற மழைக்கு நடுவே உரையாற்றிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் ஒரு நாள் நிச்சயமாக இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இவ்விழா இதைவிடப் பெரிய அளவில் நடைபெறும் என்று உறுதி யளித்து, அனைவருக்கும் நன்றி கூறி உரையினை நிறைவு செய்தார். அதன் பின்னர்தான், திரண்டி ருந்த பல்லாயிரவரும் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இருந்து புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.