அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலம் நிரந்தரமாக வைக்கப்பட்டிருப்பதுபோல்

சென்னை, ஆக. 12 - அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலம் எப்படி நிரந்தர மாக வைக்கப்பட்டுள்ளதோ அதைப் போல முரசொலி வளாகத்திலுள்ள முரசொலி காட்சியரங்கமும் நிரந்தர மாக வைக்கப்படும் என்று கழக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத் தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், முரசொலி பவள விழாவை முன்னிட்டு, நேற்று (11.08.2017) சென்னை, அண்ணா அறிவாலயத் தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செய லாளர்கள் கூட்டத்தில், முரசொலி பவள விழா நினைவுப் பரிசுகளை கழக நிர்வாகிகளுக்கு வழங்கி ஆற்றிய உரை வருமாறு :- அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்! நேற்றும் இன்றும் முரசொலி பவள விழா நிகழ்ச்சியையொட்டி என்னென்ன நிகழ்ச்சிகள் எப்படிப்பட்ட நிலையில் சிறப்புடன் நடந்து வருகின்றன என்பதைப் பற்றி நம்முடைய முதன் மைச் செயலாளரும், துணைப் பொதுச் செயலாளரும் பெருமை யுடன் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் கையெழுத்துப் பிரதியாக இதை தொடங்கி தொடர்ந்து நடத்தி, தொடர்ந்து நடத்தி என்று சொல்கிற வேளையில் இடையில் சிறு தடை ஏற்படக்கூடிய, நிறுத்தக்கூடிய நிலை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்டு, அந்த நிலை அவருக்கு ஏற்படக்கூடாது என்று நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு முடிவு எடுத்தார்கள். அந்த முடிவுதான் முரசொலி அறக்கட்டளை. எந்தக் காரணத்தை கொண்டும் முரசொலி இடையில் நின்றுவிடக் கூடாது, அது தொடர்ந்து நடந்திட வேண்டும். அதற்கு தி.மு.க.,வின் தொண்டர்கள், தோழர்கள், மாவட்டக் கழக, ஒன்றி யக் கழக, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் துணை நிற்போம் என வேண்டுகோளை, வேண்டுகோள் என்று சொல்வதை விட, அதை ஆணையாக வழங்கி, அறக்கட் டளை உருவாக்கப்பட்டு, அந்த அறக் கட்டளையில் வசூலான தொகையை முழுமையாக வங்கியில் செலுத்தி, அதன்மூலமாக வரும் வட்டியைப் பயன்படுத்தி முரசொலி இன்றைக் குத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன் னால், இது நம்முடைய காலத்தில் மட்டுமல்ல, நமக்கு பிறகு வரவிருக் கும் பல்வேறு தலைமுறைகளும் முரசொலியைத் தொடர்ந்து நடத்திட முடியும் என்றநிலை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், முரசொலியின் பவள விழாவை நாம், முரசொலி அறக்கட் டளையின் சார்பில் நேற்றும் இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறோம். நேற்று காலையில், முரசொலி தொடங்கப்பட்டு அது சந்தித்த சோதனைகள், வேதனைகள், சாதனைகளை காட்சிப்படுத்தும் வகையில் ஒரு கண்காட்சி உருவாக் கப்பட்டு, நம்முடைய ஆசிரியர் அவர்கள் தலைமையில், இந்து என்.ராம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த காட்சியரங்கைப் பார்த்து விட்டு ஆசிரியர் அவர்கள் மட்டு மல்ல, இந்து என்.ராம் அவர்கள் என்னிடத்தில், நம்முடைய முரசொலி ஆசிரியர் என எல்லோரிடமும் அவர்கள் வலியுறுத்தித் தொடர்ந்து கூறியது என்னவென்றால், அந்தக் காட்சியகம் தற்காலிகமாக அல்ல, நிரந்தரமாக இருக்க வேண்டும். எப்படி, அறிவாலயத்தில் கலைஞர் கருவூலம் இருக்கிறதோ, அதே போன்று இந்தக் காட்சியகத்துக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கும் -சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத் தார்கள். அந்தளவிற்கு அது அவர் களை கவர்ந்திருப்பது மட்டுமல்ல, வரக்கூடிய சமுதாயத்துக்கு இந்தக் காட்சியகம் தொடர்ந்து பயன்படும் வகையில் இருக்க வேண்டும் எனத் தொடர்ந்து எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன், எப்படியும் இரண்டு மாதகாலம் அந்தக் காட்சியரங்கம் இருக்கப் போகிறது. அதற்குப் பிறகு அதை இன்னும் நவீனப்படுத்தி, இன் றைக்கு இருக்கின்ற விஞ்ஞான, தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தி, அதில் இன்னும் என்னவெல்லாம் புகுத்தலாம் என்று திட்டமிட்டு, சிந்தித்து, அதற்குப் பிறகு ஒரு முடிவு எடுத்து எப்படி கருவூலம் நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கிறதோ, அதே போல முரசொலியின் காட்சியரங்க மும் நிரந்தரமாக வைக்கப்படும் என்ற உறுதியை, குறிப்பாக உங்களின் ஒத்துழைப்போடு அமைக்கப்படும் என்ற நம்பிக்கையை நான் இந்த நேரத்தில் எடுத்து வைக்க கடமைப் பட்டு இருக்கிறேன். அதேபோல, நம்முடைய முரசொலி ஆசிரியர் அவர்கள் குறிப் பிட்டுச் சொன்னார்கள். அவர் இன்றைக்கு பெங்களூரில் இருந்தா லும், எந்த பிரச்னையாக இருந்தாலும் நான் தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு, அவரை உடனடி யாக சென்னைக்கு வாருங்கள் என்று சொல்லி, அவர் இரண்டு மூன்று நாட்கள் இங்கு தங்கி, அவருடன் கலந்துபேசி, இப்படிப் பட்ட நிகழ்ச்சி நடைபெற அவரும் எல்லா வகையிலும் துணை நின்றிருக்கிறார்கள். அவர் சில அறிவுரைகளை எல்லாம் என்னிடம் எடுத்துச் சொன்னதுண்டு. அப்படி சொல்லுகிற நேரத்தில், எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் விட்டுவிடாமல், முரசொலிக்கு யார் யாரெல்லாம் துணை நின்றார்களோ, முரசொலியின் வளர்ச்சியில் யார் பங்காற்றி இருக்கிறார்களோ, முர சொலி இந்தளவிற்கு உயர்ந்து வளர்ந்து வருவதற்கு காரணமாக யார் யார் ஒருகாலத்தில் துணை நின்றிருந்தார்களோ, அவர்கள் அத்தனை பேரையும் அழைக்க வேண்டும் என்று அந்தச் செய்தியை சொன்னபோது, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, நான் ஏற்கனவே முடிவெடுத்து வைத் திருக்கிறேன், நிச்சயமாக யார் யார் அழைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அவர்கள் எல்லோரும் நிச்சயமாக அழைக்கப் படுவார்கள் என்று கூறி அத்தனை பேரையும் அழைத்தோம். அழைத்த அத்தனை பேரும் வந்தார்கள். வந்தவர்களுக்கு எல்லாம் நாம் பெருமை சேர்த்திருக்கிறோம், சிறப்பு சேர்த்திருக்கிறோம். உங்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவது, உங்களுக்கு நன்றி சொல்வது என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அண்ணன் முதன்மைச் செயலாளர் அவர்கள் வந்தவுடன் நான் முதலில் பேசுகி றேன் என்று பேசினார்கள். அடுத்து துணைப் பொதுச் செயலாளர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் அவர்கள் நானும் பேசிவிடுகிறேன் என்று பேச வந்தி ருக்கிறார். அதேபோல, நமது ஐ.பெரியசாமி அவர்களும் அவரே முன்வந்து பேசினார். அடுத்து நமது ஆசிரியர், அவர் அதிகம் பேச மாட்டார், ஆனால் அவரும் நான் வந்து பேசுகிறேன் என்று பேசினார். அதற்கடுத்து நானும் உங்களிடத்தில் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இதுதான் உந்து சக்தி. இன்றைக்கு அது நமக்கு வந்திருக்கிறது. அந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, உங்களுக்கெல் லாம் தெரியும். இந்த முரசொலி விழாவிற்கு வருகை தந்திருப்பவர் களை எல்லாம் கவுரவப்படுத்த நினைவுப் பரிசு வழங்க வேண்டும் என்று சொல்லி, எல்லோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கட்டாயம் வர வேண்டும், வராமல் இருந்துவிடக் கூடாது என நான் ஒவ்வொருவர் இடத்திலும் சொன் னேன். தமிழ் அவர்களிடத்தில் சொன்னேன். நம் முரசொலி சொர் ணம் அவர்களிடத்தில் சொன் னேன். முதல் மேலாளராக விளங்கிய சி.டி.எம் அவர்களிடத்தில் சொன் னேன். கலாநிதி மாறன, தயாநிதி கலாநிதி மாறனை பற்றி உங் களுக்குத் தெரியும், அவர் அதிக மாக எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் கூட அவர் வர மாட்டார். அவ்வளவு ரிசர்வ்ர்ட்டாக இருப்பார். அவர் அதை விரும்புவதில்லை. அவர் களிடத்தில் கூட நான் பேசும்போது அவர் சொன்னார், மாமா, நான் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கெல் லாம் வர மாட்டேன். என்னை தய்வுசெய்து தொந்தரவுப்படுத்தாதீர் கள், என்றார். முடியாது, நீ வந்தே தீர வேண்டும், வரவில்லை என்றால் விட மாட்டேன், என்று நான் சொன் னேன். அதற்குப் பிறகு வந்தார். எனக்குப் பெரிய ஆச்சரியமாகி விட்டது. அவர் மேடைக்கு வந்து அந்த ஷீல்டு வாங்கும்போது கூட நான் சொன்னேன், `ஷீல்டு வாங்கு கிறீயோ இல்லையோ, நீ வந்தது எனக்குப் போதும், என்று அப்போது சொன்னேன். முரசொலி விழாவை நடத்துவதற்கு காரணகர்த்தாக்கள்! அந்தளவிற்கு, எந்தவித குறை யும் இல்லாத நிலையில் நிகழ்ச்சியை நடத்திட வேண் டும் என்று முடிவு செய்து நடத்தி யிருக்கிறோம். இப்படி இந்த முர சொலி விழாவை நடத்துவதற்கு காரணகர்த்தாக் களாக எத்த னையோ பேர் இருந்தாலும், கம்பீர மாக 75 ஆண்டுகளை தொடும் அள விற்கு முரசொலி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று சொன் னால், இங்கிருக்கக் கூடிய நம்மு டைய மாவட்ட கழக செயலாளர் களுடைய ஒத்துழைப்பு தான் என்பதை நான் நிச்சயம் மறந்துவிட மாட்டேன். அதேநேரத்தில், நம்மு டைய மாவட்ட கழக செயலாளர் களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது இப் போது சந்தாக்களை நீங்கள் உற் சாகத்தோடு, ஊக்கத்தோடு தொடர்ந்து சேர்க்க வேண்டும். ஏற்கனவே உற்சாகத்தோடு சேர்த்துத் தந்தது போல, இப்பொழுது சந்தாக்களை சேர்த்துத் தந்து கொண்டிருக்கிறீர்கள். நான் மறுக்க வில்லை. ஆனால் சில நேரங்களில் நம்முடைய மாவட்ட கழக செயலா ளர்களிடம் வருத்தத் தோடு சொல் வது உண்டு. நாங்கள் சந்தாக்களை சேர்த்து தருகிறோம், ஆனால் முறையாக பத்திரிகைகள் குறித்த நாட்களில், குறித்த நேரத்தில் வந்து சேருவதில்லை என்று நீங்கள் கூறுவதையும் நான் மறுக்கவில்லை. ஒத்துக்கொள்கிறேன். அதற்கு என்ன காரணம் எனக் கேட்டால், சந்தாக்களை தபால்களில் அனுப்புவதால் இந்த சிக்கல் வரு கிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் தபால் காரர்கள் சேர்த்து வைத்து தான் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். சனி, ஞாயிறு என்றாலும் பரவா யில்லை. ஆனால் பல நேரங்களில் சாதாரண நாட்களில் தவிர்க்கப் படுகிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதற்காக, ஒவ் வொரு ஊரிலும் எல்லா பகுதிகளுக் கும் ஒரு முகவரை நியமித்து விட் டால் சரியாக கொண்டு போய் சேர்த்து விட முடியும். அதற்கான முயற்சிகளை நாம் எடுத்துக் கொண் டிருக்கிறோம். ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும்! உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென சொன்னால், நம்மு டைய விழுப்புரம் மாவட்ட செயலாளர் திரு. பொன்முடி அவர்கள் எல்லா ஒன்றியத்திற்கும் ஒரு ஏஜெண்ட் நியமித்து எந்தப் புகாரும் இல்லாமல், பத்திரிக்கை செல்ல ஏற்பாடு செய் திருக்கிறார். அப்படி, நியமிக்கப்பட் டுள்ள ஏஜெண்டுகளின் தொலை பேசி எண்களுக்கு அவ்வப்போது தொடர்பு கொண்டு சரியாக கொண்டு சேர்க்கப்படு கிறதா என் பதை நானே கேட்டுக் கொண்டு வருகிறேன். ஆகவே, மாவட்ட கழக செய லாளர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, நீங்கள் சந்தாக்களை சேர்த்து தருவது என்பது பெரிய விஷயமில்லை. ஆனால் அந்த சந்தாக்களுக்கு பத்திரிகைகளை கொண்டு சேர்க்கிற பணிக்கு ஒரு ஏஜெண்ட் நியமிக்க வேண்டும். நம் முடைய கட்சிக்காரராக கூட இருக்க லாம். அவருக்கு ஒரு வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இது அமைந் திடும். அந்த நிலையை நீங்கள் ஏற் படுத்தி தர வேண் டுமென அன் போடு கேட்டுக் கொள்கிறேன். இன்று மாலை யிலே மிகப்பெரிய பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. திடலில் ஏற் பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதை யும் நீங்கள் வெற்றி பெறச் செய்யவேண்டும். அதேபோல நேற்று காலை, காட்சி அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்கு பார்வைக்கு வைக்கலாம் என முடிவு செய்யப் பட்டுள்ளது. நாளைய தினம் சென்னையை சுற்றியுள்ள கழக மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு நாளாக காட்சி அரங் கத்தை பார்வை யிட இருக்கிறார்கள். அதேபோல நீங்களும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் நம்முடைய கழக தோழர்களை அந்தக் காட்சி அரங்கத்தை பார்வையிட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு ஒரு கட்டணம் வைக்கலாம் என இருக்கிறோம். அது வசூல் செய்வதற்காக அல்ல, எத் தனை பேர் வந்து பார்த்திருக் கிறார்கள் என்பதை கணக் கிட ஒரு 10 ரூபாய் என நிர்ண யிக்க இருக்கிறோம். காலை 10 மணிக்கு தொடங்கி மதி யம் 1 மணியளவிலே, அதே போல மாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணியளவில் திறந்து வைத்து பார்வையிட வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். குறிப்பாக இளைஞர்கள், மாண வர்களை அழைத்து வந்து அவர் களுக்கு காட்சி அரங்கை காணும் ஒரு வாய்ப்பையும் நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். முரசொலிதான் இயக்கத்திற்கு துணை நின்றது என அனைவரும் எடுத்துச் சொன்னார் கள். இன்னும் கூட நான் வெளிப் படையாக சொல்ல வேண்டுமென சொன்னால், என்னதான் என்னு டைய அரசியல் பணி, பொதுப் பணி 1966 தொடங்கப்பட்டது என சொன் னாலும், உண்மையிலேயே நான் மைக்கை பிடித்து பேசியது என் றைக்கு என கேட்டால் அண்ணா சாலையில் இருந்த பழைய முரசொலி அலுவலகத்தில்தான் தேர்தல் முடிவுகள் வருகிற போது அந்த முடிவை அங்கு மைக்கை பிடித்து சொல்வேன். மாநகராட்சி தேர்தல் முடிவு வருகிறபோது நம்முடைய முரசொலி ஆசிரியர் செல்வம் அவர்கள்தான் இந்த வார்டில் இவ்வளவு ஓட்டுகள் என எழுதி கொடுப்பார். அதை நான் பேசி பேசிதான், இன்றைக்கு நாடு முழுவதும் பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய நம்மை யெல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே நாமும் ஊன்று கோலாக இருந்திருக்கிறோம் என் பதை நான் நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். எவ்வளவோ பதவிகள், மேயராக, எம்.எல்.ஏ. வாக, துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், ஏன் இன்றைக்கு செயல் தலைவர் என்ற பொறுப்பைக் கூட ஏற்றுக் கொண் டிருக்கலாம். எல்லா பொறுப்பை விட நேற்றைக்கும் இன்றைக்கும் முர சொலிக்காக விழா எடுக்கிற இந்த வாய்ப்பை பெற்று இருக்கிறேனே, அதுதான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்திருக்கும் பெரும் பொறுப் பாக கருதுகிறேன். அதற்கு ஒத்து ழைப்பு கொடுத்து கொண்டிருக்கும் உங்களுக்கும் என்னுடைய நன்றி களை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று காலையிலே நடைபெற்ற கண்காட்சி அரங்கம் சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்த மாவட்ட செயலாளர் அன்பழகன் அவர்களுக்கும், மாலையில் கலை வாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச் சியையும் அரங்க அனுமதி பெற்றதில் தொடங்கி இரவு பகல் பாராமல் நிகழ்ச்சியை வெற்றி பெற வேண்டு மென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த மாவட்ட செயலாளர் சேகர் பாபு அவர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல, மாலையில் நடை பெறவிருக்கும் பொதுக்கூட்டத் திற்கு சிறப்பான வகையில் ஏற் பாடுகள் செய்து கொண்டிருக்கும் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணி யம் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். நிகழ்ச்சிக்கு பத்திரிகை யாளர்களை அழைக்கலாம் என முதலில் முடிவு செய்த போது அழைத்துப் பார்க்க லாம், அவர்கள் பெரும்பா லும் வர இயலவில்லை என் றால் பத்திரிகை ஆசிரியர் குழுவில் ஒருவரை அனுப் புங்கள் என்ற யோசனை யில்தான் இறங்கி னோம். தலைவர் கலைஞர் மீது நம்பிக்கை கொண்ட பத்திரிகையாளர்கள்! ஆனால், அதெல்லாம் முடியாது நானே வருவேன் என ஒவ்வொரு பத் திரிகை நிர்வாகிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தார்கள். எங்களுக்கு ஆச்சர்யமாக அமைந் தது. அவர்களைப் பொறுத்த வரைக் கும் முரசொலி மீதுள்ள