தமிழக அரசியலை

சென்னை, ஆக. 12- தினமலர் நாளிதழுக்கும், முர சொலிக் கும், கருத்தில், நடையில் வேறுபாடு இருந்தாலும், நாங்கள், முரசொலியை நாள்தோறும் ரசிக்க தவறுவதில்லை. முரசொலியை, கட்சிக்காரர்கள் காதலோடு வாசிக் கின்றனர்; நாங்கள் ஆவலோடு வாசிக்கிறோம், என, தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் ரமேஷ் கூறினார். முரசொலி பவள விழாவில், அவர் பேசியதாவது:- ஒரு சக பத்திரிகையாளன் என்ற முறையிலும், தினமலர் இணை ஆசிரியர் என்ற முறையி லும், இங்கு வந்துள்ளேன். முரசொலி பத்திரிகை, கலைஞர் என்ற லட்சியவாதியின் மூத்த குழந்தை. 75 ஆண்டுகளாக, இந்த குழந்தையை, அவர் வளர்த்து வந்துள்ளார். தமிழக அரசியலை தடம் மாற்றியதிலும், தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதிலும், முரசொலிக்கு பெரும் பங்கு உண்டு. ஜனரஞ்சக பத்திரிகையை தாண்டி, தனி நடையில் வெற்றி கண்டுள்ளது முரசொலி. உடன் பிறப்பே. என, கடிதம் எழுதியதன் மூலம், தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கலைஞர். பத்திரிகையாளர் எழுத்தாளரா கவும், எழுத்தாளர் பத்திரிகை யாளராகவும் இருப்பது அபூர்வம்; அந்த அபூர்வப் பிறவிகளில், கலைஞர் ஒருவர். முரசொலியின் வலிமையை பார்த்து, நாங்கள் எப்போதும் ஆச்சரியப்படுவது உண்டு. முரசொலி சந்தித்த போராட்டங்கள் பல. ஆட்சி மாற்றத்தைத் தாண்டி, நெருக்கடியைத் தாண்டி, இன்று வீறு நடை போடுவதற்குக் காரணம், கலைஞரின் மன வலிமை தான்; அந்த மன வலிமை, மன உறுதி, ஸ்டாலினுக்கு இருப்பதால், முரசொலி பவள விழாவை சிறப்பாக நடத்த முடிகிறது. முரசொலி, கட்சிக்கான பத்திரி கையாக இருந்தும், தமிழகத்தின் அனைத்துத் தளத்திலும், கவனமாக வாசிக்கப் படுகிறது. தினமலர் நாளிதழுக்கும், முர சொலிக்கும், கருத்தில்,நடையில் வேறுபாடு இருந்தாலும், நாங்கள் முரசொலியை நாள்தோறும் ரசிக்கத் தவறியதில்லை. முரசொலியை, கட்சிக்காரர்கள் காதலோடு வாசிக்கின்றனர்; நாங்கள் ஆவலோடு வாசிக்கி றோம். முரசொலியை நவீனப் படுத்தியதில், ஸ்டாலினுக்குப் பெரும் பங்கு உள்ளது. இன்று அவரது மேற்பார்வையில், முரசொலி பொதுப் பொலிவுடன் நடைபோடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.