நாட்டின் அரசியலை வடிவமைத்ததில்

சென்னை, ஆக.12- முரசொலியின் 75 ஆண்டு கால வரலாறு நாட்டின் அரசியலை வடிவ மைத்ததில் அந்தப் பத்திரிகை உயர்ந்த தொலை நோக்குடன் வழங்கிய பங்களிப்பின் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது என்று தி இந்து ஆங்கில நாளேடு முரசொலி பவளவிழாக் காட்சியரங்கம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து `தி இந்து ஆங்கில நாளேடு நேற்றைய (11.08.2017) இதழில் கருத்துக்களின் சக்தியைக் காட்சிப் படுத்தும் முரசொலி என்ற தலைப்பில் அதன் செய்தியாளர் பி.கோலப்பன் எழுதிய சிறப்புச் செய்தியை வெளி யிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது:- தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தனது முதுமை காரணமாக செயல் படாமல் இருக்கலாம்! ஆனால், அவரால் இளம் வயதில் தொடங்கப்பட்ட, அக்கட் சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75 ஆண்டுகால வரலாற்றைக் காட்டும் கண்காட்சி, ஒரு அரசியல்வாதியாக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, கார்ட்டூன் ஓவியராக, பேச்சாளராக, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த அவருடைய பொறாமை கொள்ள வைக்கும் பணிக்கு ஒரு நற்சாட்சி பத்திரமாகத் திகழ்வ தோடு மட்டுமின்றி, அரசியல் வரலாற்றில் அலங்கார வார்த்தைகள் மட்டுமின்றி கனமானக் கருத்துக்களும், எதிரிடையான விவாதங்களும் ஆட்சி செய்த காலத்தையும் நமக்குக் காட்டு கிறது. கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக் கப்பட்டுள்ள அந்தக் காட்சி அரங் கத்தை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கஸ்தூரி அன்ட் சன்ஸ் லிமிடெட் (`தி இந்து) நிறுவனத்தின் தலைவர் என்.ராம் அவர்களால் திறந்து வைக் கப்பட்ட கண்காட்சி திராவிட இயக் கத்தின் வரலாற்றைப் பிரதிபலிக் கிறது. முரசொலி நாளேட்டின் லேமி னேட் செய்யப்பட்ட சிறப்பு வெளி யீடுகள், அந்த பத்திரிக்கையில் முன் னெடுத்துச் செல்லப்பட்ட அரசியல் கொள்கைகள் பற்றி தெளிவாகக் காட்டுகிறது. பொங்கல் திருநாளின் போது, வெளியிடப்பட்ட சிறப்பு வெளியீடுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் சிறப்பான தனித்துவ மான கண்காட்சி. இது உங்களுக்கு நீங்கள் எங்கே தொடங்கினீர்கள் என்ப தையும், அதை நிலைப்படுத்த எவ்வளவு உழைப்பு செலவிடப்பட்டது என்பதையும் உங்களுக்கு நினைவுப்படுத்தும் என்று என்.ராம் கூறியுள்ளார். நீண்ட காலமாக தினந்தோறும் செயல்பட்டுவந்த ஒரு தலைவரின் மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் ஆற்றலை வெளிப்படுத்து கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். நெருக்கடி கால நிலை பற்றிய பிரிவு, பணியின் அடிப்படையிலான செயல் திறனுக்கும், அரசியல் தொலைநோக்குக் கும் அது அந்தக் காலகட்டத்தை கடந்து வருவதற்கு உதவியதையும் நிரூபிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். கையெழுத்துப் பிரதியில் தொடங்கி, இதழாகவும், நாளேடாகவும், முரசொலி யின் மாற்றத்தை விளக்குவதோடு, அது எப்படி நவீன தொழில்நுட்பத்தைத் தழுவிக் கொண்டது என்பது பற்றியும் கருத்தைத் தெரிவித்துள்ளது. இந்தப் பத்திரிகையை அச்சிடுவதற்கு பயன் படுத்தப்பட்ட கையால் இயக்கப்படும் அச்சு எந்திரமும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. திரு.கருணாநிதி அவர்களின் மகனும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த எந்திரம் இந்தக் கண்காட்சியில் நிச்சய மாக இடம் பெற வேண்டும் என்று விரும்பினார். அந்த எந்திரம் பல கைகளில் மாறி, இறுதியில் காஞ்சிபுரத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அவர் கண்டுபிடித்து இடம் பெறச் செய்துள்ளார். முரசொலி பல புயல்களைச் சந்தித்தபோதிலும் நிலைத்து நிற்கிறது என்றாலும், மற்ற திராவிட இயக்கத் தலைவர் களால் தொடங்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஏடுகள் நிறுத்தப் பட்டுவிட்டன. இந்தக் கண் காட்சியில் திராவிட இயக்கத் தின் நிறுத்தப்பட்ட பத்திரி கைகளில் பெரும்பாலானவை இதில் காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. நாட்டில் நூற்றாண்டு கண்ட பத்திரிகைகள் எல்லாம் இருக்கின்றன. இதில் முரசொலியின் சிறப்பு என்ன வென்றால், அதன் நிறுவனரும், அதன் பவளவிழா நிகழ்ச்சியைக் காண உயிருடன் இருக்கிறார் என்பதுதான்! இந்தக் கண்காட்சி புதிய தலைமுறை யினருக்கு ஓர் அரசியல் இயக்கத்தின் கடின உழைப்பு மற்றும் முன்னேற்றத்தின் பொருளை நினைவுப்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறி யுள்ளார். முரசொலி அறக்கட்டளை இரண்டு செய்திப் படங்களை (டாகுமெண்டரி) தயாரித்துள்ளது. ஒன்று கட்சி சந்தித்த நெருக்கடி நிலை பற்றியது, மற்றொன்று முரசொலியின் வரலாறு பற்றியது. இந்த காட்சியரங்கத்தின் முக்கிய கவர்ச்சிகளாக இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியரான முரசொலி செல்வத்துக்கு சட்டப்பேரவையில் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட காட்சி மற்றும் திரு.மு.கருணாநிதி அவர்கள் அமர்ந்து எழுதிய அறை அவருடைய மெழுகுச் சிலையோடு வடிவமைக்கப்பட்டது போன்றவை உள்ளன. முரசொலி கட்சித் தொண்டர் களுக்கு அரசியல் கல்வி அளிப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தையும் பார்வையாளர்கள் காண முடியும். அதற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவிலும்அதில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு கட்டுரை கொலைகளை வென்றவன் இது அடால்ப் எய்ச்மானின் விசாரணை மற்றும் மரணதண்டனைப் பற்றி கூறு கிறது. மற்றொன்று முரசொலி மாறனால் எழுதப்பட்டது. இது அசாமில் உருவான குறுகிய இனவெறியைக் குறித்து எச்சரிக்கிறது. ஒரு முழுப்பக்கச் செய்தி கட்சியின் நிறுவனரான சி.என். அண்ணாதுரை யேல் பல்கலைக்கழகத் தில் மாணவர்களுக்கு திருக்குறள் கற்பித்ததை விளக்குகிறது. இவ்வாறு அந்தச் சிறப்பு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.