தமது வாழ்நாளில் முக்கால் பங்கை முரசொலிக்காகவே அர்ப்பணித்து

சென்னை, ஆக.12- சென்னை - கலைவாணர் அரங்கில், நேற்று முன்தினம் மாலை, பத்திரிக்கையாளர் கள் - கலைஉலகினர் பங் கேற்ற மாபெரும் வாழ்த் தரங்கில் பங்கேற்றுச் சிறப் புரையாற்றிய ஆனந்த விக டன் குழும மேலாளர் இயக் குநர் பா.சீனிவாசன், தமது வாழ்நாளில் முக்கால் பங்கை முரசொ லிக்கா கவே அர்ப்பணித்து தமிழ கத்தின் மிக மூத்த பத்திரிக் கையாளராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் கள் விளங்குகிறார்! எனப் புகழாரம் சூட்டினார். விழாவில் ஆனந்த விகடன் குழும மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் பேசியதாவது:- 75 ஐ வாழ்த்துகிறது 90 - முரசொலியை வாழ்த்து கிறது ஆனந்த விகடன். பொதுவாக, வாழ்த்த வய தில்லை என்பார்கள். ஆனால் முரசொலியை வாழ்த்துவதற்கு ஆனந்த விகடனுக்கு வயதும் இருக் கிறது. தகுதியும் இருக் கிறது. தி.மு.க.வை விமர்சித்து விகடன் எழுதி இருக்கிறது. எழுதி வருகிறது. எழுதி வரும். ஆனந்தவிகடனை விமர்சித்து முரசொலியும் பலமுறை எழுதி வந்திருக் கிறது. எழுதி வரும். பூணூல் பத்திரிக்கை, அவாள் பத்திரிக்கை பார்ப் பனிய பத்திரிக்கை என் றும் பாரம்பரியப் பத்தி ரிக்கை என்றும் கோட்டை யில் கழகம் அமர்ந்திருக் கும் சூழல் கருதி விக டனை முரசொலி விமர்சித் ததும் உண்டு. வாழ்த்திய தும் உண்டு. ஆக்கப் பூர்வமான ஊடகம் என்பதே நல்லது, கெட்டதை எடுத்துச் சொல் வதுதான். அந்த வகையில் நாட்டுக்குத் தேவையான தைச் செய்தால் ஆனந்த -விகடன் உடன் பாடு இல்லா ததைச் செய்தால் ஆனந்த விகடன் எதிர்க்கும். இதை ஏற்றுக் கொண்ட தால்தான் என்னை அழைத் திருக்கிறீர்கள். இந்த மேடையில் கலைஞர் நடு நாயகமாக உட்கார்ந்து இருக்க வேண்டும். உடல் நிலை காரண மாக வீட்டில் அவர் ஓய்வு எடுத்தாலும் அவரது சிந் தனை கோபால புரத்தைத் தாண்டி கலைவாணர் அரங் கத்தில் தான் இருக்கும். முரசொலிக்கு என்று பிரத்யேகமாக ஒரு பாட்டு ஒன்று எழுதி அதை கலைஞருக்கு திரும்பத் திரும்ப போட்டுவிட்டால் கலைஞர் புத்துணர்வு பெற்று வந்து விடுவார் என்று நம்பிக்கை இருக் கிறது. ஏனென்றால் முர சொலி அவரது மூத்த பிள்ளை மட்டுமில்லை. முரசொலியைக் காதலித்த வர் கலைஞர்! கலைஞர் வாரிசு அர சியலைத்தான் வளர்க் கிறார் என்று பலரும் குற்றம் சாட்டுவார்கள். அதைக் கேட்கும்போது உங்களுக் கும் கோபம் வரும். நீங்கள் கோபப்படக்கூடாது... அவர் வாரிசு அரசியலைத்தான் வளர்த்தார். ஏனென்றால் முரசொலியைத்தான் தனது மூத்த பிள்ளை என்று சொன்னார். அந்த மூத்த பிள்ளையைத்தான் வளர்த்தார். மகனுக்கு 75 வயது. ஆனாலும் 94 வயது அப்ப வுக்கு அதுவும் குழந்தை தானே. விடியும் போது முர சொலி முகத்தில் விழித்து - தூங்கும் போதும் முரசொலிக் காக எழுதி தனது வாழ் நாளின் முக்கால் பங்கை முரசொலிக்காகவே அர்ப் பணித்தவர் கலைஞர். இவ்வாறு `ஆனந்த விகடன் குழும மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் பேசினார்.